Thursday, January 20, 2011

விரும்பிய செல்பேசி நிறுவனத்திற்கு மாறிக்கொள்ளும் வசதி - ரூ.19/-



மேலும்  விளக்கத்திற்கு 
http://idlyvadai.blogspot.com/2011/01/mnp.html

Sunday, December 19, 2010

மதுரை ரயில்களின் எண்கள் மாற்றம்!

நன்றி : தட்ஸ் தமிழ் 

மதுரை: மதுரை கோட்ட ரெயில்வேயில் திங்கட்கிழமை முதல் எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் ரெயில்களுக்கான புதிய ரெயில் எண்கள் நடைமுறைக்கு வருகின்றன. 

நாடு முழுவதும் பயணிகளின் வசதிக்காக அதிகளவில் புதிய ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், அனைத்து ரெயில்களுக்கும் எண்கள் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து இந்திய ரெயில்வேயில் உள்ள எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரெயில்களின் எண்களில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது.

இந்த எண் மாற்றம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இதில் எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு பழைய எண்களுக்கு முன்னால் 1 சேர்க்கப்படுகிறது. ஆனால் பாசஞ்சர் ரெயிலின் எண்கள் முழுமையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 

மதுரை வழியாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் புதிய எண்கள் விவரம் பின்வருமாறு:

மதுரை- சென்னை- மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் எண் 12635/12636

மதுரை-சென்னை -மதுரை பாண்டியன் எக்ஸ் பிரஸ் 12637/12638

நெல்லை-சென்னை- நெல்லை எக்ஸ்பிரஸ் 12632/12631

கன்னியாகுமரி- சென்னை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 12633/12634

நாகர்கோவில் -சென்னை வாராந்திர எக்ஸ்பிரஸ் 12667/12668

செங்கோட்டை- சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் 12662/12661

தூத்துக்குடி-சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் 12694/12693

ராமேசுவரம்-கன்னியா குமரி-ராமேசுவரம் எக்ஸ் பிரஸ் 12789/12790

மதுரை-சென்னை மெயின்லைன் எக்ஸ்பிரஸ் 12793/12794

ராமேசுவரம்-சென்னை மெயின்லைன் எக்ஸ்பிரஸ் 16701/16702

ராமேசுவரம்-சென்னை சேது எக்ஸ்பிரஸ் 16714/16713

திருவனந்தபுரம் -சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் 16724/16723

தூத்துக்குடி-மைசூர் எக்ஸ்பிரஸ் 16731/16732

ராமேசுவரம்-ஓகா எக்ஸ்பிரஸ் 16733/16734 

மதுரை கோட்ட ரெயில் வேக்கு உட்பட்ட பாசஞ்சர் ரெயில்களின் புதிய எண் வருமாறு:-

(பழைய எண்கள் அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்பட்டுள்ளன)

நெல்லை-மயிலாடுதுறை பாசஞ்சர் 56822 (826 ஏ)

மயிலாடுதுறை-நெல்லை பாசஞ்சர் 56821 (825 ஏ)

மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் 56731(783)

செங்கோட்டை-மதுரை பாசஞ்சர் 56736(784)

மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் 56735(785)

செங்கோட்டை-மதுரை பாசஞ்சர் 56732(786)

மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் 56733(787)

செங்கோட்டை-மதுரை பாசஞ்சர் 56734(788)

மதுரை-ராமேசுவரம் பாசஞ்சர் 56723(753)

ராமேசுவரம்-மதுரை பாசஞ்சர் 56726(756)

மதுரை-ராமேசுவரம் பாசஞ்சர் 56721(751)

ராமேசுவரம்-மதுரை பாசஞ்சர் 56724(754)

மதுரை-ராமேசுவரம் பாசஞ்சர் 56725(755)

ராமேசுவரம்-மதுரை பாசஞ்சர் 56722(752)

விழுப்புரம்-மதுரை பாசஞ்சர் 56705(701)

மதுரை-விழுப்புரம் பாசஞ்சர் 56706(702)

மதுரை-திண்டுக்கல் பாசஞ்சர் 56710(716)

திண்டுக்கல்-மதுரை பாசஞ்சர் 56709(715)

திண்டுக்கல்-மதுரை பாசஞ்சர் 56707(711)

மதுரை-திண்டுக்கல் பாசஞ்சர் 56708(712)

மதுரை-கொல்லம் பாசஞ்சர் 56700(727)

கொல்லம்-மதுரை பாசஞ்சர் 56701(728)

திருச்சி-காரைக்குடி பாசஞ்சர் 06839 (839 ஏ)

காரைக்குடி-திருச்சி பாசஞ்சர் 06840 (840 ஏ)

காரைக்குடி- மானாமதுரை பாசஞ்சர் 06837 (841)


மானாமதுரை- காரைக் குடி பாசஞ்சர் 06838 (842).

Monday, November 22, 2010

நவ்ஸ் என்கிற நவரத்தினத்திற்கு கொடைக்கானலில் ஏற்பட்ட திகில் அனுபவம்

என் பெயர் நவரத்தினம். நண்பர்கள் என்னை நவ்ஸ் என்று அழைப்பார்கள். நான் என் நண்பர்களுடன் கொடைக்கானல் சுற்றுலா சென்றேன். அது ஒரு அடை மழை காலம். நல்ல குளிர் காற்று. மழை காரணமாக சில இடங்களில் நிலச்சரிவு. பல இடங்களை சுற்றிப்பார்த்ததில் நேரம் போனதே தெரியவில்லை. மாலை முடிந்து இருள் லேசாக கவியத் தொடங்கியது.

இறுதியாக தற்கொலை பாறை பகுதிக்கு சென்றோம். அங்கே வேலி போடப்பட்டு இருந்ததினால், அங்கிருந்த சிலரின் எச்சரிக்கையையும் மீறி சிறிது தள்ளி வேலி இடாத பகுதிக்கு சென்றோம்.அவ்விடத்தில் மண் ஈரத்தின் காரணமாக உறுதியற்று இருந்தது. அதனால் மற்றவர்கள் வந்த வழியே திரும்பி செல்ல ஆரம்பித்தனர். ஆனால் நானும் இன்னொரு நண்பனும் முன்னே சென்று பள்ளத்தாக்கை பார்த்துவிட்டு திரும்பலாம் என்று நினைத்தோம். நான் இன்னும் சிறிது முன்னே விளிம்பின் அருகில் சென்றேன். நண்பன் என்னை பின் தொடர்ந்து வந்தான். திடீர் என்று என் காலுக்கு கீழுள்ள மண் சரிந்தது. நான் பள்ளத்தில் சரிய ஆரம்பித்தேன். என் பின்னால் வந்த நண்பன், என் கையை பிடித்து மேலே தூக்க முயற்சி செய்தான். என் கண் முன்னே உலகம் சுற்றியது. மண் சரிவு மேலும் அதிகரிக்க ஆரம்பித்தது. அவனால் என்னை மேலே தூக்க முடியவில்லை. அவன் நின்ற இடமும் சிறிது சிறிதாக சரியாய் ஆரம்பித்தது. அதனால் அவன் தன் முயற்சியை கைவிட்டு மற்ற நண்பர்களை அழைக்க சென்றான்.

ஆனால் அவர்கள் வருவதற்குள் மண் சரிவு அதிகரித்தால் நான் வேகமாக சரிந்தேன். பிடிமானம் எதுவுமில்லை. சரிந்து கொண்டே மண்ணுக்குள் புதைந்தேன். கடைசியில் ஒரு இடத்தில் சரிவு முடிந்தது. என் தலைக்கு மேல் முழுவதும் மண். மூச்சு விட முடியவில்லை. கண்ணை திறந்து பார்த்தால் சுற்றிலும் இருள். கையை கொண்டு முகத்தின் மேலிருந்த மண்ணை அகற்ற முயன்றேன். நான் மண்ணின் ஆழத்தில் இருந்ததால் அகற்ற அகற்ற மண் வந்து கொண்டே இருந்தது. என் பயம் அதிகரித்தது. உடம்பு முழுவதும் வேர்க்கிறது. உயிர் பிழைக்க வேண்டும் என்ற உந்துதலில் என் மேலுள்ள மண்ணை முன்னிலும் வேகமாக அகற்றினேன். இருந்தும் பயனில்லை. கடைசியில் ஒரு வழியாக முகத்தை மூடியுள்ள மண் முழுவதையும் அகற்றிப் பார்த்தால் தலைக்கு மேலே மின்விசிறி சுற்றும் ஓசை கேட்கிறது. அடச்சீ கனவு!!! கனவும் நனவும் சந்தித்த புள்ளியில் அதிர்ச்சியை உணர்ந்தேன். என்னை சுற்றிலும் கருப்பு நிற கம்பளி போர்வை. தூக்கத்தில் குளிருக்கு இதமாக முகம் முழுவதையும் மூடி இருந்த போர்வையை அகற்றத்தான் இத்தனை பாடுபட்டிருக்கிறேன். வெட்கி தலை குனிந்தேன். எப்படியோ மிகப் பெரிய ஆபத்தில்லிருந்து தப்பிய திருப்தியோடும் அதிர்ச்சியோடும் அடுத்த சுற்று தூக்கத்தை ஆரம்பித்தேன். புதிய கனவுக்கு ஆயத்தமானேன்.