Wednesday, December 30, 2009

மறைந்த கன்னட நடிகர் விஷ்ணுவர்தன் அவர்களுக்கு அஞ்சலிகள்


விஷ்ணுவர்தன் தமிழில் ரஜினியுடன் விடுதலை, நாட்டுக்கு ஒரு நல்லவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் ரஜினியின் நெருங்கிய நண்பரும் ஆவார். தமிழில் மிக பெரும் வெற்றியடைந்த நாட்டாமை, வானத்தை போல போன்ற படங்களின் கன்னட ரீமேக்கில் அவர் நடித்துள்ளார். அவை கன்னடத்திலும் மிக பெரிய வெற்றி அடைந்துள்ளன.

கடைசியாக அவர் P. வாசுவின் இயக்கத்தில் ஆப்த ரக்ஷகா (சந்திரமுகி இரண்டாம் பாகம்) என்ற படத்தில் நடித்திருந்தார். இது அவரின் 200 வது படமாகும். இந்த படம் 2010 ல் வெளியாகும். அவருடைய மறைவு கன்னட திரையுலகில் மிக பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது.

அவர் நடித்த படங்களின் பட்டியல்
http://www.vishnuvardhan.com/totlist.htm

http://en.wikipedia.org/wiki/Vishnuvardhan_(actor)

நடிகர் விஷ்ணுவர்த்தன் நினைவாக - ரேடியோஸ்பதி பதிவு
http://radiospathy.blogspot.com/2009/12/blog-post_30.html

என்வழி பதிவு

அவர் நடித்த பாடல்களில் சில


ஆப்தமித்ரா - கன்னட சந்திரமுகி ரா ரா


சந்திரமுகி தெலுங்கு வாராய்.......

Friday, December 25, 2009

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் - தேவனின் கோயிலிலே யாவரும் தீபங்களே

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். தொண்ணூறுகளில் கிறிஸ்துமஸ் சமயத்தில் தூர்தர்ஷன் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியில் கீழே குறிப்பிட்டுள்ள இரண்டு பாடல்களில் ஒன்று கண்டிப்பாக இடம்பெறும். இரண்டுமே சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த பாடல்கள்.

1) பாடல் : தேவனே என்னை பாருங்கள்
படம் : ஞான ஒளி
2) பாடல் : தேவனின் கோயிலிலே யாவரும் தீபங்களே
படம் : வெள்ளை ரோஜா


Thursday, December 24, 2009

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 331 விமானம் தரையிறங்கும் போது மூன்று பகுதிகளாக உடைந்து நின்றது. அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை.நேற்று (23-12-2009)அமெரிக்காவில் உள்ள மியாமியில் இருந்து மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள கிங்க்ஸ்டன், ஜமைக்கா நோக்கி சென்ற அமெரிக்க ஏர்லைன்ஸ் 331 விமானம், தரையிறங்கும் போது ஓடுதளத்திலிருந்து வழுக்கி சென்று , தடுப்புகளை உடைத்து விமான நிலையத்தின் அருகில் உள்ள கடற்கரையில் மூன்று பகுதிகளாக உடைந்து நின்றது. அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. காயமடைந்தோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்த காணொளிவிபத்து குறித்த கூகிள் செய்திகளுக்கு இங்கே கிளிக்கவும்.

Tuesday, December 22, 2009

ஸ்னோ பௌலிங் - நகைச்சுவை காணொளி


எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு - நகைச்சுவை காணொளி


Sunday, December 20, 2009

டிரெட்மில்லில் நடை பயிற்சி செய்யும் அரபு மனிதர் - நகைச்சுவை காணொளி


Thursday, December 17, 2009

சைக்கிள் சாகசக் கலைஞர் - பிபிசி காணொளி

இந்த காணொளியை யு டியூபில் பதிவு செய்த முதல் 40 மணி நேரத்தில் 350000 பேர் கண்டுகளித்தனர்.Source : http://news.bbc.co.uk/2/hi/uk_news/scotland/edinburgh_and_east/8010262.stm

Saturday, December 12, 2009

ரேணிகுண்டா படப்பிடிப்பை நேரில் பார்த்த அனுபவம்


14-06-2009 அன்று கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரத்தில் நண்பர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்ள சென்றிருந்தேன்.திருமண மண்டபம் உப்பிலியப்பர் கோயிலுக்கு எதிரிலேயே இருந்தது. திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள், உப்பிலியப்பர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தால் திருப்பதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்று நண்பர் கூறினார்.

திருமண நிகழ்ச்சி முடிந்ததும், சுவாமி தரிசனம் செய்து விட்டு, பின்னர் கும்பகோணம் கிளம்ப மதியம் ஆகிவிட்டது. எனக்கு பெங்களூர் இரயில் மாலை ஆறு மணிக்கு தான் என்பதால், கும்பகோணம் சென்று ஏதாவது தமிழ் படத்திற்கு செல்லலாம் என்று நினைத்திருந்தேன். கும்பகோணம் பேருந்து நிலையத்திற்கு அருகே திரைஅரங்குகள் இல்லாததால், ஆனந்த விகடனை வாங்கி கொண்டு இரயில்வே ஸ்டேசனுக்கு சென்று விட்டேன்.

பெங்களூர் இரயில் ஆறு மணிக்கு வரும் என்பதால், எப்படி பொழுதை போக்குவது என்று யோசித்து கொண்டிருந்தேன். அங்கு புத்தகத்தை படித்து முடித்துவிட்டு நான்கு மணிக்கு முதலாவது நடை மேடைக்கு சென்றேன். அங்கு ஒரு இரயில் நின்று கொண்டு இருந்தது. இரயிலில் சென்னை To மும்பை என்று ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுதப்படிருந்தது. கும்பகோணத்திலிருந்து மும்பைக்கு ட்ரெயின் இருக்கிறதா என்று ஆச்சர்யமடைந்தேன்.அந்த இரயிலின் அருகே பலர் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அருகில் சென்று பார்த்த பொழுது படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. ஒரு சண்டை காட்சியை படமாக்கி கொண்டிருந்தனர். படப்பிடிப்பு நடக்கும் நடைமேடையில் காமெராவில் படுவது போல ஆங்காங்கே தெலுங்கு விளம்பர பலகைகளை வைத்திருந்தார்கள். நான் அருகிலிருந்தவரிடம் இந்த படத்தின் பேர் என்ன என்று கேட்டேன். அவர் ரேணிகுண்டா என்று கூறினார். பேரை கேட்டதும் நான் அது ஒரு தெலுங்கு படம் என்று நினைத்து கொண்டேன்.

ஓடும் இரயிலில் சண்டையிடும் ஒரு இளைஞர், வெளியே பறந்து வந்து விழுவது போல் காட்சி.

அந்த இளைஞரை பார்க்க பரிதாபமாக இருந்தது. வெயிலில் முகம் கருத்து, அழுக்கான உடை அணிந்து இருந்தார். அவருடைய இடுப்பில் கயிறு கட்டி இருந்தது. இரயில் பெட்டி வாசலின் முன்புறம், அவர் படுக்கை வசத்தில் கயிற்றின் உதவியால் கிடைமட்டமாக மிதந்து கொண்டிருந்தார். கைகளை தலையின் பின்னால் கொண்டு சென்று, பின் நீச்சல் அடிப்பது போல் கைகளை மேலும் கீழும் மெதுவாக அசைக்க வேண்டும் என்று அந்த இளைஞரிடம் இயக்குனர் கூறினார். இடுப்பில் மட்டுமே கயிறு கட்டி இருந்தாதால், இளைஞரால் தலையையும், காலையும் பேலன்ஸ் செய்ய முடியவில்லை. அதனால் கிடைமட்டமாக இல்லாமல், சில சமயம் தலை அல்லது /----\ கால் பகுதி கீழ்ப்க்கம் சாய்ந்தது. அதனால் காட்சி சரியாக வரவில்லை. இயக்குனர் இரண்டு மூன்று டேக்குகளுக்கு பிறகு காட்சியை OK செய்தார். அதுவரை அந்த இளைஞர் சிரமத்துடன் கிடைமட்டமாக தொங்கிகொண்டு இருந்தார். காட்சி சரியாக வரும் வரை இயக்குனர் அந்த இளைஞரை திட்டிக் கொண்டே இருந்தார்.

அப்பாடி காட்சி முடிந்தது, அந்த இளைஞரை இப்பொழுதாவது கயிற்றிலிருந்து கீழே இறக்குவார்கள் என்று நிம்மதி பெரு மூச்சுவிட்டேன். ஆனால் இயக்குனர் அடுத்த ஷாட்டுக்கு குழுவை தயார் செய்து கொண்டிருந்தார். அது என்ன ஷாட் என்றால், ஏற்கனவே பிரண்ட் வியூவில் எடுத்த காட்சியை டாப் ஆங்கிளில் படமாக்குவது. இதற்காக ஒரு கேமராவை கிரேனில் இணைத்திருந்தார்கள். அந்த கேமராவை ரிமோட் மூலம் கண்ட்ரோல் செய்தார்கள். கேமராவில் எடுக்கப்படும் காட்சி இயக்குனரின் அருகில் இருந்த டிவியில் தெரிந்தது. கேமரா கிரேன் இளைஞரின் தலைக்கு மேலே வந்தது. இப்பொழுது டாப் ஆங்கிளில் படமாக்குவதால் இளைஞரின் முகம் தெரியும். அதனால் சரியாக எக்ஸ்பிரசன் கொடுக்க வேண்டும் என்று இயக்குனர் கூறினார். இரண்டு மூன்று டேக்குகளுக்கு பிறகு இந்த காட்சியும் OK ஆனது. அதுவரை அந்த இளைஞர் படும் கஷ்டம் பார்க்க கொடுமையாக இருந்தது. ஸ்டண்ட் கலைஞர்கள் இப்படிதான் கஷ்டப்படுவார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.

இதற்கிடையே நேரம் ஆறு மணி ஆகிவிட்டதால் நான் பெங்களூர் இரயிலை பிடிக்க இரண்டாவது நடை மேடைக்கு சென்று விட்டேன். கடந்த வாரம், ரேணிகுண்டா பட விமர்சனத்தையும், புகைப்படங்களையும் வலைபூக்களில் பார்த்த பொழுது தான் அது தமிழ் படம் என்றும், சண்டை காட்சியில் நடித்த இளைஞர் தான் படத்தின் ஹீரோ என்றும் தெரிந்தது.

படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

Friday, December 11, 2009

யெப்பா - "பா" தமிழ் ரீமேக் - புகைப்படம்

"பா" ஹிந்தி திரைப்படத்தை சிம்புவை அப்பாவாகவும் T. ராஜேந்தரை மகனாகவும் வைத்து தமிழில் ரீமேக் செய்தால் எப்படி இருக்கும் - புகைப்படம்

நகல்


அசல்


இதே படத்தில் சூர்யா - சிவகுமார், சிபிராஜ் - சத்யராஜ், பிரசாந்த் - தியாகராஜன் நடித்திருந்தால் படம் எப்படி வந்திருக்கும் என்பதை பின்னூட்டத்தில் கூறவும்.

ஹமாரா பஜாஜ் - 90 களில் வெளிவந்த பஜாஜ் ஸ்கூட்டர்களின் விளம்பரம் - காணொளி , பஜாஜ் ஸ்கூட்டர்கள் தயாரிப்பு நிறுத்தம்

பஜாஜ் நிறுவனம் ஸ்கூட்டர்கள் தயாரிப்பதை நிறுத்திவிட்டு, பைக் பக்கம் கவனம் செலுத்துகிறது.15 வருடங்களுக்கு முன்பு, எங்கள் ஊரில் ஒவ்வொரு மருத்துவரிடமும் ஒரு பஜாஜ் ச்சேடக் (Chetak) ஸ்கூட்டர் இருக்கும். அதன் முன் பக்கத்தில் + ஸ்டிக்கர் ஒட்டி இருப்பார்கள். கிளினிக் முன் ஸ்கூட்டர் இருந்தால் டாக்டர் வந்து விட்டார் என்று அர்த்தம். அந்த சமயத்தில் LML Veapa ஸ்கூட்டரும் பிரபலம். ஸ்கூட்டர் ஸ்டார்ட் ஆக வில்லை என்றால், ஸ்கூட்டரை கீழே தரை வரை சாய்த்து, பின்னர் ஸ்டார்ட் செய்வார்கள். கால ஓட்டத்தில் ஸ்கூட்டர்களும் காணாமல் போய்க்கொண்டு இருக்கின்றன.

மேலும் தகவல்களுக்கு http://thatstamil.oneindia.in/news/2009/12/10/bajaj-stop-scooter-production-focus.html

ஹமாரா பஜாஜ் - 90 களில் வெளிவந்த பஜாஜ் ஸ்கூட்டர்களின் விளம்பரம் - காணொளிSaturday, December 5, 2009

இன்போசிஸ் CEO க்ரிஸ் கோபாலகிருஷ்ணன் அவர்களின் பேட்டி

இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா இதழில் வெளிவந்துள்ள இன்போசிஸ் CEO & MD க்ரிஸ் கோபாலகிருஷ்ணன் அவர்களின் பேட்டி.

படிக்க கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கவும்.

http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOIBG/2009/12/05&PageLabel=28&EntityId=Ar02800&ViewMode=HTML&GZ=TThursday, December 3, 2009

தத்துவங்கள் - நகைச்சுவை

சமீபத்தில் எனக்கு மின்னஞ்சலில் வந்த நகைச்சுவை தத்துவங்கள். படத்தை கிளிக்கி பெரிதாக்கி படிக்கவும்.

Tuesday, December 1, 2009

நீங்கள் இதுபோல் எப்போதாவது பிரியாணி சாப்பிட்டு இருக்கிறீர்களா? - படங்கள்

படங்களை கிளிக்கி பெரிதாக்கி பார்க்கவும்.