Showing posts with label Sujatha. Show all posts
Showing posts with label Sujatha. Show all posts

Thursday, August 6, 2009

மீண்டும் ஜீனோ - சுஜாதா - MEENDUM JEENO



முதல் பாகமான என் இனிய இயந்திராவில் சர்வாதிகாரி ஜீவா ஆளும் நாட்டின் தேச பக்தி கீதத்தை பற்றி இவ்வாறு குறிப்பிட்டு இருப்பார்.

தந்தையின் மணிக்கொடி
பாரீர்..... அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் அதன்
உச்சியின் மேல் ஜீவா வாழ்கவேன்றே.....

பள்ளியில் நாம் பாடிய அசல் தேசியக் கோடி பாடல் இதோ

தாயின் மணிக்கொடி
பாரீர்...... அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் அதன்
உச்சியின் மேல் மூவர்ணங்களோடு......

மீண்டும் ஜீனோ நாவலைப் பற்றி சுஜாதா அவர்களின் கருத்து :
இந்தக் கதையில் ஜீனோ என்ற இயந்திர நாய் மனித சமுதாயம் சுபிட்சமடைய ராணி நிலாவுக்கு உதவுகிறது. அதற்காக அது செய்யும் சாகசங்கள் மிக அற்புதம்.

மனிதர்களைவிட இயந்திரங்கள் உண்மையாய்ப் பாசாங்கு செய்யாமல் இந்த தேசத்தைக் காக்க முடியும். ஆள்வோர் தன் கடமைகளைச் சரியாகச் செய்யாமல் சுயநல வேட்கை கொண்டு நாட்டை வேட்டைக் காடாக்கி வரும் இந்த நாளில்...? அதற்கு மாற்று என்ன? இப்படி யோசித்ததின் பலனே இந்தப் புதிய சிந்தனை.

மீண்டும் ஜீனோ சுஜாதா - MEENDUM JEENO
இந்த நாவலை இணையத்தில் படிக்க அல்லது தரவிறக்கம் செய்து படிக்க கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கவும்.
http://www.scribd.com/doc/6365090/-Meendum-Jeeno-sujatha

Thursday, July 23, 2009

என் இனிய இயந்திரா - சுஜாதா

N-ENINIYA ENDHIRAஎன் இனிய இயந்திரா - சுஜாதா
இது கி.பி. 2021-22 ல் நடப்பது போன்ற கதை. இந்த விஞ்ஞான நாவல் ஆனந்தவிகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வந்து பின்னர் தூர்தர்ஷனில் தொடராக வந்தது. அதில் நிலாவாக நடிகை சிவரஞ்ஜனி நடித்திருந்தார். இந்த தொடரில் வந்த ஜீனோ என்னும் ரோபோ நாய்க் குட்டி செய்யும் நகைச்சுவைகளும் சாகசங்களும் அனைவரையும் சிரிக்க, சிந்திக்க வைத்து வியப்பில் ஆழ்த்தும்.

இந்த தொடரில்வந்த பிரபலமான வசனம் ஒன்று (ரோபோ பேசுவது போல் கட்டை குரலில் சொல்லி பார்க்கவும்)
நீ நிலா, நான் ஜீனோ
இந்த நாவலில் ஜீனோ-ரோபோ நாய்க் குட்டி தன்னுடைய பாட்டரியை சார்ஜ்
செய்து கொள்ள Ajax என்னும் கம்பனிக்கு செல்லும் என்று எழுதியிருப்பார். இந்த நவீன இணைய நாட்களில் Ajax என்பது மிக அதிக அளவில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம். அந்த பெயரை 20 வருடங்களுக்கு முன்பே அவர் பயன்படுத்தி இருப்பார். இதே போல் இப்போதைய தொழில்நுட்பங்கள் பலவற்றையும் அப்போதே அவர் பயன்படுத்தி இருப்பார்.

இந்த நாவலை இணையத்தில் படிக்க அல்லது தரவிறக்கம் செய்து படிக்க கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கவும்.

http://www.scribd.com/doc/6249336/-En-Iniya-Endhira-Sujatha

இந்த நாவலை
ப் பற்றி சுஜாதா அவர்களின் கருத்து :
'என் இனிய இயந்திரா' ஆனந்தவிகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளிவந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதையில் உள்ள 'விஞ்ஞானத்தை' வியந்து இப்படியெல்லாம் நடக்குமா என்று கேட்டிருந்தார்கள். 'விஞ்ஞானக் கதை' என்பது விஞ்ஞானப்படி சாத்தியமாக இருக்கவேண்டும் என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தப்பு. விஞ்ஞானக் கதை என்பதின் தற்போதைய வடிவத்தில் அது எல்லையற்ற மிக விஸ்தாரமான கற்பனையாக இருக்கிறது. அதனால் மாற்று உலகங்களையும் மாற்று சித்தாந்தங்களையும் படைக்க முடிகிறது.




Wednesday, July 22, 2009

விக்ரம் - எழுதியவர் திரு.சுஜாதா


விக்ரம் - சுஜாதா

சுஜாதா அவர்களின் நாவல்கள் மற்றும் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் .விக்ரம் என்ற அவரது இந்த நாவல் சிறிது காலதிற்கு பிறகு கமல் அவர்களின் நடிப்பில் திரைப்படமாக வெளிவந்தது.

மிகவும் விறுவிறுப்பான நாவல். உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த நாவலை இணையத்தில் படிக்க அல்லது தரவிறக்கம் செய்து படிக்க கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கவும்.
http://www.scribd.com/doc/4955984/-Vikram-Sujatha