Thursday, July 23, 2009

என் இனிய இயந்திரா - சுஜாதா

N-ENINIYA ENDHIRAஎன் இனிய இயந்திரா - சுஜாதா
இது கி.பி. 2021-22 ல் நடப்பது போன்ற கதை. இந்த விஞ்ஞான நாவல் ஆனந்தவிகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வந்து பின்னர் தூர்தர்ஷனில் தொடராக வந்தது. அதில் நிலாவாக நடிகை சிவரஞ்ஜனி நடித்திருந்தார். இந்த தொடரில் வந்த ஜீனோ என்னும் ரோபோ நாய்க் குட்டி செய்யும் நகைச்சுவைகளும் சாகசங்களும் அனைவரையும் சிரிக்க, சிந்திக்க வைத்து வியப்பில் ஆழ்த்தும்.

இந்த தொடரில்வந்த பிரபலமான வசனம் ஒன்று (ரோபோ பேசுவது போல் கட்டை குரலில் சொல்லி பார்க்கவும்)
நீ நிலா, நான் ஜீனோ
இந்த நாவலில் ஜீனோ-ரோபோ நாய்க் குட்டி தன்னுடைய பாட்டரியை சார்ஜ்
செய்து கொள்ள Ajax என்னும் கம்பனிக்கு செல்லும் என்று எழுதியிருப்பார். இந்த நவீன இணைய நாட்களில் Ajax என்பது மிக அதிக அளவில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம். அந்த பெயரை 20 வருடங்களுக்கு முன்பே அவர் பயன்படுத்தி இருப்பார். இதே போல் இப்போதைய தொழில்நுட்பங்கள் பலவற்றையும் அப்போதே அவர் பயன்படுத்தி இருப்பார்.

இந்த நாவலை இணையத்தில் படிக்க அல்லது தரவிறக்கம் செய்து படிக்க கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கவும்.

http://www.scribd.com/doc/6249336/-En-Iniya-Endhira-Sujatha

இந்த நாவலை
ப் பற்றி சுஜாதா அவர்களின் கருத்து :
'என் இனிய இயந்திரா' ஆனந்தவிகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளிவந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதையில் உள்ள 'விஞ்ஞானத்தை' வியந்து இப்படியெல்லாம் நடக்குமா என்று கேட்டிருந்தார்கள். 'விஞ்ஞானக் கதை' என்பது விஞ்ஞானப்படி சாத்தியமாக இருக்கவேண்டும் என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தப்பு. விஞ்ஞானக் கதை என்பதின் தற்போதைய வடிவத்தில் அது எல்லையற்ற மிக விஸ்தாரமான கற்பனையாக இருக்கிறது. அதனால் மாற்று உலகங்களையும் மாற்று சித்தாந்தங்களையும் படைக்க முடிகிறது.




3 comments:

Unknown said...

மிகவும் தொழில் நுட்ப ரீதியாக செல்லும் இத்தகைய நாவலை எழுவதற்கு இந்த தலைமுறையிலுள்ள ஆசிரியர்களால் கூட முடியாது.
சுஜாதா ஒரு பல்கலைக்கழகம்..
keep on writin..
thank yu very much for the link
good luck
i'm waitin for your next post
mal ramanathan
sri Lanka

Jawahar said...

அது மட்டுமில்லை, (எழுபத்திறேண்டாம் வருஷம் என்று ஞாபகம்) கணையாழியின் கடைசி பக்கங்களில் கம்ப்யூட்டர் என்னவெல்லாம் செய்யும் என்று எழுதும் போது, கம்ப்யூட்டர் இசை அமைக்கும் என்று எழுதி இருக்கிறார்.

இன்றைய தேதியில் இசையமைப்பு முக்கால் டெக்னாலஜியும்,கால் இசை ஞானமும்தான்.

ஆ..அதெப்படி நீ சொல்லலாம் என்று கொதித்து எழுகிறவர்கள் எனக்கு போன் செய்யலாம்.(௯௮௯௪௪௪௮௦௬௪) நான் முகவரி சொல்கிறேன். என்னை வந்து பாருங்கள், பதினைந்து நிமச்த்தில் கம்ப்யூட்டரில் ஒரு பாடலை உருவாக்கி காட்டுகிறேன்.

குப்பன்.யாஹூ said...

as mal said, Sujatha is university. thanks useful post