Tuesday, July 28, 2009

மதுரையில் முதன்முறையாக தொப்புள் கொடி திசு வங்கி (Stem Cell Bank)


மதுரை: தென்மாவட்டங்களில் முதன்முறையாக மதுரை கே.கே.நகரில் கல்லூரி எதிரே லைப்செல் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தொப்புள் கொடி திசு வங்கி நேற்று துவங்கப்பட்டது. தற்போது தொப்புள்கொடி ரத்தம் மூலம் நோய்களை குணப்படுத்தும் முறையில், மைல் கல்லாக தொப்புள் கொடி திசு சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


நிறுவனத் தலைவர் மயூர் அபாயா கூறியதாவது: இதன் மூலம் இருதய நோய், சர்க்கரை நோய், பக்கவாதம் மற்றும் குணப்படுத்த முடியாத நோய்களை குணப்படுத்த முடியும். இதுதவிர 60 வகையான நோய்களை குணப்படுத்துவது குறித்து ஆராய்ச்சி நடக்கிறது. தொப்புள் கொடி திசுவின் திறனை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் சென்னை லைப்செல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையத்தால் உருவாக்கப்பட்டது.


தொப்புள் கொடி திசுவை 21 ஆண்டுகளுக்கு சேமிக்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு இரட்டை பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளோம். மேலும் விபரங்கள் அறிய 93620 22188ல் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறினார்.எஸ்.பி.பி. எண்டர்பிரைசஸ் இயக்குநர் சுப்புராஜ், லைப்செல் துணைத் தலைவர் நிரஞ்சன், தலைமை அறிவியல் வல்லுநர் டாக்டர் அஜித்குமார், மண்டல மேலாளர் அனிதா உடனிருந்தனர்.

Source : http://www.dinamalar.com/Pothunewsdetail.asp?News_id=15522
Thanks : தினமலர்

No comments: