Nandan's brief of his first day in parliament! - VeryInteresting
நாடாளுமன்றத்தில் நந்தன் நில்கேனியின் முதல் நாள்
முன்னால் இன்போசிஸ் தலைவரும் தற்போதைய அரசியல்வாதியுமான நந்தன் நில்கேனியின் முதல் நாள் நாடாளுமன்ற அனுபவங்கள் - ஆங்கில மின்னஞ்சலின் தமிழாக்கம் இதோ உங்களுக்காக.
நாடாளுமன்றம் குண்டூசி விழுந்தால் கூட கேட்குமளவு அமைதியாயிருந்தது. நான் முழு உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் இருந்தேன்!!!! என்னுடைய அறிமுகம் இன்றைய கூட்டத் தொடரின் ஒரு முக்கிய அம்சம் என்று மாண்பு மிகு பாரதப் பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்கள் முன்கூட்டியே தெரிவித்து இருந்தார். என்னுடைய முதல்
நாடாளுமன்ற உரையை நன்றாக வழங்க முடியும் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். பல பேட்டிகளுக்கும் சந்திப்புகளுக்கும் பிறகு நான் உணர்ச்சி வசப்பட்டவனாய் இருந்தேன். சபாநாயகர் அவையை தொடங்கி வைத்த பின், பிரதமர் என்னை அவைக்கு அறிமுகம் செய்து வைத்தார். நான் இந்திய நாட்டின் குடிமக்கள் அடையாள அட்டை வழங்கும் அமைப்பின் தலைவர் என்றும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மின்னணு அடையாள அட்டை வழங்கும் பொறுப்பினை வகிக்கிறேன் என்றும் குறிப்பிட்டார். மேலும் அவர் நான் இந்த திட்டத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்பதையும், இன்போசிஸ்-ல் நான் செயல்படுத்திய பல்வேறு ப்ரோஜெக்ட்களை பற்றயும் குறிப்பிட்டார். அவையோர் இந்த தகவல்கள் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்தனர். நான் சில வார்த்தைகள் பேசும்படி கேட்டுக்கொள்ளப்பட்டேன். நான் இந்திய அரசாங்கத்திற்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டு , இந்த ப்ரொஜெக்டை வெற்றிகரமாக முடித்து கொடுப்பதாக உறுதி அளித்தேன். சபா நாயகர் என்னை அவையில் இணைத்துக் கொண்டார். அவையின் செயல்பாடுகள் தொடங்குவதற்கு முன்பாக அவையின் ஒரு பக்கத்தில் இருந்து சிறிது சத்தம் கேட்டது.
அந்த சத்தம் ஜவுளித் துறை அமைச்சரிடம் இருந்து வந்தது. நான் கோட் சூட் போன்ற உடைகளை தவிர்த்து எளிமையான ஆடைகளை அனிந்து வர வேண்டும் என்று குறிப்பிட்டார். நான் பதில் அளிப்பதற்காக எழுந்து நின்றேன். என்னுடைய வருத்தங்களை தெரிவித்துக் கொண்டு அடுத்த முறையிலிருந்து அனைவரும் ஏற்றுக் கொள்ள கூடிய எளிய ஆடைகளை அணித்து வருவதாகாக குறிப்பிட்டேன். ஜவுளித் துறை அமைச்சர் கூறியது சரி என்று நினைக்கிறேன். நாங்கள் இன்போசிசிலும் கார்ப்பரேட் உடை விதிகளை பின்பற்றினோம். நாடாளுமன்றத்திலும் அது போன்ற உடை விதிகள் உள்ளன போலும்.
நான் அமர்ந்த பொழுது யாரோ என்னை அழைப்பது போல் உணர்ந்தேன். அது யார் என்று பார்த்த பொழுது ஆச்சர்யமடைந்தேன். அது முன்னால் இந்திய கிரிக்கெட் அணித் தலைவரும் எனக்கு பிடித்த மட்டை வீச்சாளருமான மொஹமத் அசாருதீன். அவர் சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்றது நினைவுக்கு வந்தது. அவரை பார்த்து புன்னகைத்து அவருடைய விளையாட்டை மிகவும் ரசித்தாகக் கூறி கை குலுக்கினேன். தன்னுடைய குர்தா ஆடைகளை வடிவமைத்த இத்தாலிய ஆடை வடிவமைப்பாளருடன் எனக்கு நேரம் ஒதுக்கி தருவதாக கூறினார். மிலனிலுள்ள இத்தாலிய ஆடை வடிவமைப்பாளர் இந்திய குர்தா ஆடைகளை வடிவமைக்கிறார்!!!!! பிரைட்மேன் எழுதி வரும் அடுத்த புத்தகத்தின் பெயர் உலகச் சந்தைகள் தட்டையாகிவிட்டன. அந்த புத்தக ஆசிரியரிடம் இந்த எடுத்துகாட்டை கொடுக்க வேண்டும் என்று குறித்துக் கொண்டேன். அந்த ஆடை வடிவமைப்பாளரின் விபரங்களை தருமாறும் பின்னர் தான் இது குறித்து தெரிவிப்பதாகவும் அசாரிடம் கூறினேன். பின்னர் அவையில் பல்வேறு புதிய தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டன. நான் என்னுடைய ப்ரொஜெக்டின் முறை வரும் வரை வெறும் பார்வையாளனாக அமர்ந்திருந்தேன். மதிய உணவு
இடைவேளைக்கு பிறகு என்னுடைய ப்ரொஜெக்டின் முறை வந்தது!!!!!
என்னுடைய மடிக்கணியில் போதிய அளவு மின்சாரம் இல்லை. நான் மன்மோகன் அவர்களிடம் இதைப் பற்றி தெரிவித்தேன். எனக்கு வேர்த்து கொட்டியது. இதை பற்றி கவலை பட வேண்டாம் என்று அவர் அமைதியாக பதிலளித்தார். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை!!!!! சபாநாயகர் மின்னணு அடையாள அட்டை வழங்கும் ப்ரோஜெக்டிற்கான என்னுடைய திட்டங்களை பற்றி விளக்குமாறு கேட்டுக்கொண்டார். என்னுடைய திட்டம் 30-60-90-120 நாட்கள் மைல் கல் சாதனைகளை உள்ளடக்கியது. இதை பற்றி விளக்குவதற்கு மின்சார இணைப்பு,ப்ரொஜெக்டர் மற்றும் திரை ஆகியவை வேண்டும் என்று கேட்டேன். இதற்கடுத்து என்ன நிகழப் போகிறது என்று எனக்கு ஒரு யோசனையும் இல்லை.
அடுத்த இரண்டு நிமிடங்கள் எனக்கு மிகவும் வன்முறையாக கடந்தது.நான் மிகவும் கவலைப்பட்டேன். என்னுடைய கோரிக்கை உகந்ததா என தீர்மானிக்க ஒரு மூத்த காபினெட் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. மின்சாரம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்பு துறை அதிகாரிகள் என்னுடைய கோரிக்கையை மிகவும் கவனமாக ஆய்வு செய்து அதில் ஏதேனும் தேசிய பாதுகாப்புக்கு குறைபாடுகள் உள்ளனவா என்று ஒரு அறிக்கையை தயாரிப்பார்கள். இது ஏனென்றால் மின்சார இணைப்பு மின்துறையின் கீழும் , மடிகணினி தகவல் தொழில்நுட்பதுறையின் கீழும் , ப்ரொஜெக்டர் ஒளிபரப்பு துறையின் கீழும் வருகின்றன. என்னுடைய திட்டங்களை 30-60-90-120 நாட்கள் என்றில்லாமல் 2-4-6 என்று வருடக் கணக்கில் மாற்றி கொள்ள என்றும் அறிவுறுத்தப்பட்டேன். அவர்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம். இந்த விசயத்தில் என்னுடைய கணிப்பு தவறாக இருந்திருக்கலாம்.
கடைசியில் இந்த விசயத்தில் அவர்கள் சொன்னது என்னவென்றால்,நான் முழுமையான, சுதந்திரமான, அனைத்தையும் உள்ளடக்கிய, ஐந்து வருடங்களுக்கு மேல் செயல்படுத்தக்கூடிய நீண்ட கால திட்டத்துடன் வர வேண்டும். என்னுடைய ப்ரொஜெக்டை பற்றி விளக்கமளிக்க எனக்கு மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டுமொரு வாய்ப்பு வழங்கப்படும் (இதற்குள்ளாக மடிக்கணினி மின்சார இணைப்பு தொடர்பான பிரச்சினைகள் சரி செய்யப்பட்டுவிடும்) . நான் பல்வேறு குழம்பிய உணர்வுகளால் நிரம்பி இருந்தேன். நான் ஒரு உடனடி தீர்விற்கு திட்டமிட்டால் நிர்வாகம் நீண்ட கால தீர்வை விரும்புகிறது.
நான் நாடாளுமன்றத்தை விட்டு வெளியே வந்து திரு.மூர்த்தி அவர்களுக்கு ஒரு குறுந்தகவலை அனுப்பினேன். நீங்கள் நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள் ஆனால் இங்குள்ளவர்களும் நம்மைப்போல் தான் வேலை செய்கிறார்கள். அடுத்த மூன்று மாதங்களுக்கு நான் தேசிய நாற்காலியில் (NATIONAL BENCH) அமர்த்தபட்டிருகிறேன். நான் இப்பொழுது ஒரு வேலை இல்லாத பெரியவன் (VIP).
இந்த மின்னஞ்சலை ஆங்கிலத்தில் படிக்க இங்கே சொடுக்கவும்
http://funnyelectronicmails.blogspot.com/2009/07/nandans-brief-of-his-first-day-in.html
Disclaimer: I have got this on my email. so cant comment on authenticity of this blog. It may be a joke floating around on net. So just read and enjoy.
Wednesday, August 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நந்தன் பாவம் .... வேற என்ன சொல்றது ... கடவுள் அவருக்கு உதவட்டும்!
Methink it is a spoof.
Post a Comment