Saturday, August 15, 2009

தினமலர் வாரமலர் - அந்துமணி பா.கே.ப. வில் படித்த நகைச்சுவை

ரயில் ஏறிய ஒரு விருந்தாளி, வழியனுப்ப வந்தவரிடம் குறைபட்டுக் கொண்டார்... "நான் ரயிலுக்கு டிக்கட் ரிசர்வ் பண்ணப் போனேன்... அப்போதே சொல்லியிருக்கலாம்... திரும்பி வந்து டிரஸ்சை எல்லாம் பெட்டியில் அடுக்கினேன்... அப்போது சொல்லியிருக்கலாம்... நீங்க சொல்லலே... அப்புறம் குளித்து, டிரஸ் பண்ணி கிளம்பினேன்... அப்போதும் சொல்லலே... பேசாம இருந்துட்டீங்க... அப்புறம், ஸ்டேஷனுக்கு வர, ஆட்டோ பிடிக்கப் போனேன்... அப் போதும், "கம்'முன்னு இருந்தீங்க: வாயே தொறக்கலே... அப்புறம், உங்க குடும்பத்திலே எல்லார் கிட்டேயும்,"போய்ட்டு வரேன்'ன்னு சொல்லிட்டு புறப்பட்டேன்... அப்போவும் சொல்லாம, பேசாம இருந்தீங்க... இப்போ... நான் ரயில்லே ஏறி உட்கார்ந்து, கார்டு விசில் ஊதி, பச்சைக் கொடியும் காட்டி, வண்டியும், "மூவ்' ஆயிட்டு. இப்போ போயி, "இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போகலாம்...'ன்னு சொல்றீங்களே... இது உங்களுக்கே நல்லாயிருக்கா...'


இதை படித்ததும் திருமண மண்டபத்தில் நடந்த சுவையான சம்பவம் நினைவுக்கு வந்தது.

நானும் , என் நண்பனும் திருமண வீட்டிற்கு சென்றிருந்தோம். உணவு கூடத்தில் பரிமாற ஆட்கள் தேவைப்பட்டதால் நாங்கள் சென்று உதவி செய்தோம். என் நண்பன் இயல்பிலேயே ஒரு குறும்புக்காரன். நான் இட்லி பரிமாறிக் கொண்டிருந்தேன். என் நண்பன் சாம்பார் ஊற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தான். ஒரு பெண் சாப்பிட்டு முடிக்கும் தருவில் இருந்தாள். அவளது இலையில் இரண்டு மூன்று இட்லி துண்டுகள் எஞ்சி இருந்தன. அந்த பெண் என் நண்பனிடம் சாம்பார் ஊருமாறு கூறினாள்.

அவனும் சென்று கரண்டி நிறைய சாம்பார் எடுத்தான். அதை ஊற்றப் போகும் முன்பு அந்த பெண் போதும் போதும் என்றாள்.அவனும் சாம்பார் ஊற்றாமலாயே சாம்பார் வாளியை தூக்கி கொண்டு வேறு வரிசைக்கு சென்று விட்டான்.

இதை வந்து அவன் எங்களிடம் கூறவும் அன்று முழுவதும் ஒரே சிரிப்புத்தான் ...

1 comment:

சென்ஷி said...

:)))

//அவனும் சென்று கரண்டி நிறைய சாம்பார் எடுத்தான். அதை ஊற்றப் போகும் முன்பு அந்த பெண் போதும் போதும் என்றாள்.அவனும் சாம்பார் ஊற்றாமலாயே சாம்பார் வாளியை தூக்கி கொண்டு வேறு வரிசைக்கு சென்று விட்டான்.//

திருமண விருந்துகளில் நடக்குற கலாட்டா எப்பவுமே தனிச்சுவையோட தான் இருக்கும் தலைவா!