Monday, August 10, 2009

இளவரசியின் மறு பிறவியா ஜாக்சன்?




எகிப்து நாட்டு இளவரசியின் மறு பிறவிதான் மைக்கேல் ஜாக்சன் என்று ஒரு செய்தி கிளம்பியதால் புதுப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜாக்சன் உயிருடன் இருந்தபோதும் அவரைப் பற்றியும், அவரைச் சுற்றியும் ஏகப்பட்ட சர்ச்சைகள், செய்திகள். இறந்த பின்னரும் கூட அது ஓயவில்லை. தினசரி ஒரு புதுப் புது செய்தி ஜாக்சன் குறித்து வந்தவண்ணம் உள்ளது.

இந்த நிலையில் ஜாக்சன், எகிப்து நாட்டு இளவரசியின் மறு பிறவி என்று ஒரு புதுச் செய்தி கிளம்பவே அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள அருங்காட்சியகத்தி்ல ஒரு எகிப்து நாட்டு இளவரசியின் புராதன சிலை உள்ளது. இந்த சிலையைப் பார்த்தவர்கள் அப்படியே நின்று போய் விட்டனர். காரணம், இந்த சிலை அப்படியே அச்சு அசல், ஜாக்சனைப் போலவே இருப்பதால்.

இதையடுத்து எகிப்து இளவரசியின் மறு பிறவிதான் ஜாக்சன் என்று அவரது ரசிகர்கள் செய்தி கிளப்பி வருகின்றனர். மேலும், அந்த அருங்காட்சியகத்திற்கும் ரசிகர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். சிலையைப் பார்க்கும் அவர்கள், நிச்சயம் ஜாக்சன் இந்த இளவரசியின் மறு பிறவிதான் என்று அடித்துக் கூறுகின்றனர்.

இதுகுறித்து அருங்காட்சியகத்தின் பிரதிநிதி ஒருவர் கூறுகையில், ஜாக்சன் இந்த மியூசியத்திற்கு வந்திருப்பாரா என்று தெரியவில்லை. ஆனால் இந்த சுண்ணாம்புக் கல் பெண்ணின் சிலை அப்படியே ஜாக்சன் போல்தான் உள்ளது. இது 3000 ஆண்டுகள் பழமையான சிலையாகும் என்றார்.

நன்றி : thatstamil
Source : http://thatstamil.oneindia.in/movies/hollywood/2009/08/10-michael-jackson-egyptian-princess-reincarnate.html

1 comment:

nila said...

பாவங்க அவரு... செத்தும் நிம்மதி இல்லை.. இன்னும் எத்தனை புரளி கிளம்பபோகுதோ தெரியலை...