Tuesday, July 28, 2009

மதுரையில் முதன்முறையாக தொப்புள் கொடி திசு வங்கி (Stem Cell Bank)


மதுரை: தென்மாவட்டங்களில் முதன்முறையாக மதுரை கே.கே.நகரில் கல்லூரி எதிரே லைப்செல் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தொப்புள் கொடி திசு வங்கி நேற்று துவங்கப்பட்டது. தற்போது தொப்புள்கொடி ரத்தம் மூலம் நோய்களை குணப்படுத்தும் முறையில், மைல் கல்லாக தொப்புள் கொடி திசு சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


நிறுவனத் தலைவர் மயூர் அபாயா கூறியதாவது: இதன் மூலம் இருதய நோய், சர்க்கரை நோய், பக்கவாதம் மற்றும் குணப்படுத்த முடியாத நோய்களை குணப்படுத்த முடியும். இதுதவிர 60 வகையான நோய்களை குணப்படுத்துவது குறித்து ஆராய்ச்சி நடக்கிறது. தொப்புள் கொடி திசுவின் திறனை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் சென்னை லைப்செல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையத்தால் உருவாக்கப்பட்டது.


தொப்புள் கொடி திசுவை 21 ஆண்டுகளுக்கு சேமிக்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு இரட்டை பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளோம். மேலும் விபரங்கள் அறிய 93620 22188ல் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறினார்.எஸ்.பி.பி. எண்டர்பிரைசஸ் இயக்குநர் சுப்புராஜ், லைப்செல் துணைத் தலைவர் நிரஞ்சன், தலைமை அறிவியல் வல்லுநர் டாக்டர் அஜித்குமார், மண்டல மேலாளர் அனிதா உடனிருந்தனர்.

Source : http://www.dinamalar.com/Pothunewsdetail.asp?News_id=15522
Thanks : தினமலர்

Thursday, July 23, 2009

என் இனிய இயந்திரா - சுஜாதா

N-ENINIYA ENDHIRAஎன் இனிய இயந்திரா - சுஜாதா
இது கி.பி. 2021-22 ல் நடப்பது போன்ற கதை. இந்த விஞ்ஞான நாவல் ஆனந்தவிகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வந்து பின்னர் தூர்தர்ஷனில் தொடராக வந்தது. அதில் நிலாவாக நடிகை சிவரஞ்ஜனி நடித்திருந்தார். இந்த தொடரில் வந்த ஜீனோ என்னும் ரோபோ நாய்க் குட்டி செய்யும் நகைச்சுவைகளும் சாகசங்களும் அனைவரையும் சிரிக்க, சிந்திக்க வைத்து வியப்பில் ஆழ்த்தும்.

இந்த தொடரில்வந்த பிரபலமான வசனம் ஒன்று (ரோபோ பேசுவது போல் கட்டை குரலில் சொல்லி பார்க்கவும்)
நீ நிலா, நான் ஜீனோ
இந்த நாவலில் ஜீனோ-ரோபோ நாய்க் குட்டி தன்னுடைய பாட்டரியை சார்ஜ்
செய்து கொள்ள Ajax என்னும் கம்பனிக்கு செல்லும் என்று எழுதியிருப்பார். இந்த நவீன இணைய நாட்களில் Ajax என்பது மிக அதிக அளவில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம். அந்த பெயரை 20 வருடங்களுக்கு முன்பே அவர் பயன்படுத்தி இருப்பார். இதே போல் இப்போதைய தொழில்நுட்பங்கள் பலவற்றையும் அப்போதே அவர் பயன்படுத்தி இருப்பார்.

இந்த நாவலை இணையத்தில் படிக்க அல்லது தரவிறக்கம் செய்து படிக்க கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கவும்.

http://www.scribd.com/doc/6249336/-En-Iniya-Endhira-Sujatha

இந்த நாவலை
ப் பற்றி சுஜாதா அவர்களின் கருத்து :
'என் இனிய இயந்திரா' ஆனந்தவிகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளிவந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதையில் உள்ள 'விஞ்ஞானத்தை' வியந்து இப்படியெல்லாம் நடக்குமா என்று கேட்டிருந்தார்கள். 'விஞ்ஞானக் கதை' என்பது விஞ்ஞானப்படி சாத்தியமாக இருக்கவேண்டும் என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தப்பு. விஞ்ஞானக் கதை என்பதின் தற்போதைய வடிவத்தில் அது எல்லையற்ற மிக விஸ்தாரமான கற்பனையாக இருக்கிறது. அதனால் மாற்று உலகங்களையும் மாற்று சித்தாந்தங்களையும் படைக்க முடிகிறது.
Wednesday, July 22, 2009

விக்ரம் - எழுதியவர் திரு.சுஜாதா


விக்ரம் - சுஜாதா

சுஜாதா அவர்களின் நாவல்கள் மற்றும் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் .விக்ரம் என்ற அவரது இந்த நாவல் சிறிது காலதிற்கு பிறகு கமல் அவர்களின் நடிப்பில் திரைப்படமாக வெளிவந்தது.

மிகவும் விறுவிறுப்பான நாவல். உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த நாவலை இணையத்தில் படிக்க அல்லது தரவிறக்கம் செய்து படிக்க கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கவும்.
http://www.scribd.com/doc/4955984/-Vikram-Sujatha


Monday, July 13, 2009

தமிழ்நாடு அரசு சொகுசுப் பேருந்து

சமீபத்தில் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு தமிழ்நாடு அரசு சொகுசுப் பேருந்தில் பயணம் செய்தேன். ஒரே மூட்டை பூச்சி கடி.
கலைஞர் பாணியில் சொல்வதென்றால்

ய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்
உள்ளே பார்த்தல் ஈரும் பேனாம்
தமிழ்நாடு அரசாம் சொகுசுப் பேருந்தாம்
காசு கொடுத்து பயணம் செய்தால் மூட்டை பூச்சி கடியாம்.