செய்தியை படிக்க கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=72473
Tuesday, September 7, 2010
Sunday, July 11, 2010
மதராசபட்டினம் என் பார்வையில் (100 வது பதிவு)
பெங்களூரு மகேஸ்வரி திரை அரங்கில் மதராசபட்டினம் திரைப்படம் காண சென்றேன். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சிறந்த படத்தை பார்த்த திருப்தி ஏற்பட்டது. படத்திற்காக உழைத்த கலைஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
இயக்குனர் விஜய்க்கு இந்த படம் உண்மையிலேயே ஒரு கிரீடம்.
ஆர்யாவும், ஹீரோயினும் அருமையாக நடித்திருக்கிறார்கள். ஹீரோயின் கொள்ளை அழகு.
1947 ம் ஆண்டு சென்னையை அப்படியே நம் கண் முன் நிறுத்தி இருக்கிறார்கள். கலை இயக்குனருக்கு மிகவும் கடினமான பணி. சிறப்பாக செய்திருக்கிறார்.
வாம்மா துரையம்மா - இது
வங்கக் கடலம்மா
இந்த பாடல் வரிகளுக்கும், படத்தின் முடிவுக்கும் மிகவும் நெருங்கிய தொடர்புண்டு. படமும், படத்தில் பங்குபெற்ற அனைத்து கலைஞர்களும் பல விருதுகளை பெற வாழ்த்துக்கள்.
மேலும் இது போல் பல வித்தியாசமான கதையம்சங்கள் கொண்ட படங்கள் வந்தால் தமிழ் சினிமா தழைத்தோங்கும். அனைவரும் காண வேண்டிய படம் - Don't miss it.
************************
பிகேபி, ஜாக்கிசேகர், இட்லிவடை, கேபிள் சங்கர் ஆகியோருக்கு நன்றி. இவர்களுடைய வலைப்பூக்களை படித்து பார்த்துதான் எனக்கும் பதிவெழுதும் ஆர்வம் ஏற்பட்டது.பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தும் நண்பர்களுக்கும், என் பதிவுகளை பின்தொடர்ந்து படிக்கும் நண்பர்களுக்கும், அனைத்து தமிழ் வலைபதிவர்களுக்கும் மிக்க நன்றி.
கேபிளாரின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் ஜாக்கியாரின் ஒளிப்பதிவில் பல சிறந்த படங்களை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
நன்றி! வணக்கம்.
Subscribe to:
Posts (Atom)