Tuesday, October 12, 2010

பொங்கலுக்கு 93 நாட்கள் முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

நன்றி: தட்ஸ் தமிழ்

நெல்லை: பொங்கல் பண்டிக்கைகான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி மாதம் 14-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது.

அடுத்து மாட்டு பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம் என சனி, ஞாயிறு, விடுமுறை தினங்கள் என்பதால் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோர் மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் ஜனவரி இரண்டாவது வாரம் முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக இருக்கும்.

பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முன்கூட்டியே பயணத் திட்டத்தை தயார் செய்து வருகின்றனர்.

ரயிலில் பயணம் செய்ய 90 நாட்களுக்கு முன்னதாகத் தான் முன்பதிவு செய்ய முடியும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி பயணம் செய்ய இன்று முன்பதிவு தொடங்கியது. ஜனவரி 11-ம் தேதிக்கு நாளையும், ஜனவரி 12-ம் தேதிக்கு அக்டோபர் 14-ம் தேதியும், ஜனவரி 13-ம் தேதிக்கு அக்டோபர் 15-ம் தேதியும், ஜனவரி 14-ம் தேதிக்கு அக்டோபர் 16-ம் தேதியும் முன்பு பதிவு செய்யலாம்.

வழக்கம் போல முன்பதி்வு தொடங்கிய சில நிமிடங்களிலேயே பொங்கல் பண்டிகையையொட்டி ரயில்கள் நிரம்பி விடும் என்பதால் முன்கூட்டியே டிக்கெட் எடுத்து விட அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


1 comment:

Chitra said...

போற போக்கை பார்த்தால், அடுத்த வருஷ பொங்கலுக்கு நெல்லை போவதற்கு, இந்த வருஷமே எடுக்க வேண்டும் என்ற நிலைமை வந்து விடும் போல..... அவ்வ்வ்....