Wednesday, December 30, 2009

மறைந்த கன்னட நடிகர் விஷ்ணுவர்தன் அவர்களுக்கு அஞ்சலிகள்


விஷ்ணுவர்தன் தமிழில் ரஜினியுடன் விடுதலை, நாட்டுக்கு ஒரு நல்லவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் ரஜினியின் நெருங்கிய நண்பரும் ஆவார். தமிழில் மிக பெரும் வெற்றியடைந்த நாட்டாமை, வானத்தை போல போன்ற படங்களின் கன்னட ரீமேக்கில் அவர் நடித்துள்ளார். அவை கன்னடத்திலும் மிக பெரிய வெற்றி அடைந்துள்ளன.

கடைசியாக அவர் P. வாசுவின் இயக்கத்தில் ஆப்த ரக்ஷகா (சந்திரமுகி இரண்டாம் பாகம்) என்ற படத்தில் நடித்திருந்தார். இது அவரின் 200 வது படமாகும். இந்த படம் 2010 ல் வெளியாகும். அவருடைய மறைவு கன்னட திரையுலகில் மிக பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது.

அவர் நடித்த படங்களின் பட்டியல்
http://www.vishnuvardhan.com/totlist.htm

http://en.wikipedia.org/wiki/Vishnuvardhan_(actor)

நடிகர் விஷ்ணுவர்த்தன் நினைவாக - ரேடியோஸ்பதி பதிவு
http://radiospathy.blogspot.com/2009/12/blog-post_30.html

என்வழி பதிவு

அவர் நடித்த பாடல்களில் சில


ஆப்தமித்ரா - கன்னட சந்திரமுகி ரா ரா


சந்திரமுகி தெலுங்கு வாராய்.......

Friday, December 25, 2009

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் - தேவனின் கோயிலிலே யாவரும் தீபங்களே

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். தொண்ணூறுகளில் கிறிஸ்துமஸ் சமயத்தில் தூர்தர்ஷன் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியில் கீழே குறிப்பிட்டுள்ள இரண்டு பாடல்களில் ஒன்று கண்டிப்பாக இடம்பெறும். இரண்டுமே சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த பாடல்கள்.

1) பாடல் : தேவனே என்னை பாருங்கள்
படம் : ஞான ஒளி




2) பாடல் : தேவனின் கோயிலிலே யாவரும் தீபங்களே
படம் : வெள்ளை ரோஜா


Thursday, December 24, 2009

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 331 விமானம் தரையிறங்கும் போது மூன்று பகுதிகளாக உடைந்து நின்றது. அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை.



நேற்று (23-12-2009)அமெரிக்காவில் உள்ள மியாமியில் இருந்து மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள கிங்க்ஸ்டன், ஜமைக்கா நோக்கி சென்ற அமெரிக்க ஏர்லைன்ஸ் 331 விமானம், தரையிறங்கும் போது ஓடுதளத்திலிருந்து வழுக்கி சென்று , தடுப்புகளை உடைத்து விமான நிலையத்தின் அருகில் உள்ள கடற்கரையில் மூன்று பகுதிகளாக உடைந்து நின்றது. அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. காயமடைந்தோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்த காணொளி



விபத்து குறித்த கூகிள் செய்திகளுக்கு இங்கே கிளிக்கவும்.