Showing posts with label இரயில். Show all posts
Showing posts with label இரயில். Show all posts

Tuesday, October 12, 2010

பொங்கலுக்கு 93 நாட்கள் முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

நன்றி: தட்ஸ் தமிழ்

நெல்லை: பொங்கல் பண்டிக்கைகான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி மாதம் 14-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது.

அடுத்து மாட்டு பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம் என சனி, ஞாயிறு, விடுமுறை தினங்கள் என்பதால் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோர் மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் ஜனவரி இரண்டாவது வாரம் முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக இருக்கும்.

பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முன்கூட்டியே பயணத் திட்டத்தை தயார் செய்து வருகின்றனர்.

ரயிலில் பயணம் செய்ய 90 நாட்களுக்கு முன்னதாகத் தான் முன்பதிவு செய்ய முடியும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி பயணம் செய்ய இன்று முன்பதிவு தொடங்கியது. ஜனவரி 11-ம் தேதிக்கு நாளையும், ஜனவரி 12-ம் தேதிக்கு அக்டோபர் 14-ம் தேதியும், ஜனவரி 13-ம் தேதிக்கு அக்டோபர் 15-ம் தேதியும், ஜனவரி 14-ம் தேதிக்கு அக்டோபர் 16-ம் தேதியும் முன்பு பதிவு செய்யலாம்.

வழக்கம் போல முன்பதி்வு தொடங்கிய சில நிமிடங்களிலேயே பொங்கல் பண்டிகையையொட்டி ரயில்கள் நிரம்பி விடும் என்பதால் முன்கூட்டியே டிக்கெட் எடுத்து விட அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Sunday, November 8, 2009

இந்திய இரயில்வே பயணசீட்டுகளை முன்பதிவு செய்ய உதவும் இணையதளங்கள்

திருவிழாக்கால இரயில் பயணசீட்டுகளை http://irctc.co.in இணையதளம் தவிர்த்து மற்ற இணையதளங்கள் வழியாக முன்பதிவு செய்வது எப்படி?

சென்னையிலும், பெங்களூரிலும் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்பவர்கள் திருவிழா காலங்களில் பயணம் செய்ய மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே பயணசீட்டுகளை முன்பதிவு செய்தாலும் பெரும்பாலும் காத்திருப்போர் பட்டியலில் தான் பயணசீட்டு கிடைக்கிறது.அனைத்து பயணசீட்டுகளும் ஐந்தே நிமிடங்களில் காலியாகிவிடுகின்றன.

இணைய இணைப்பு இல்லாதோர், முன்பதிவு மையங்களுக்கு மூன்று மணி நேரங்களுக்கு முன்பே சென்று வரிசையில் நின்று கால்கடுக்க காத்திருக்க நேரிடுகிறது.

இணைய இணைப்பு உள்ளோர், http://irctc.co.in இணையதளத்திற்கு சென்றால், Bad Request அல்லது The server is currently busy போன்ற பிழை செய்திகள் வருகின்றன.

அத்தகைய நேரங்களில் பயணசீட்டுகளை முன்பதிவு செய்ய கீழ்க்கண்ட இணைய தளங்கள் உங்களுக்கு கைகொடுக்கலாம். முயற்சித்து பாருங்கள். பயணசீட்டுகளை முன்பதிவு செய்ய இந்த தளங்களில் உங்களுக்கு ஒரு Login Account உருவாக்கிக் கொள்ளுங்கள்.

http://www.cleartrip.com/trains
http://www.thomascook.in/indus/indianRail/indus/IRHome.do
http://www.yatra.com/trains.html
http://www.makemytrip.com/railways/
http://www.ezeego1.co.in/rails/index.php


GPRS வசதி உள்ள செல்பேசிகளிலிருந்து பயணசீட்டுகளை முன்பதிவு செய்ய ngpay என்ற அப்ளிகேசனை, தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

http://www.ngpay.com
http://www.ngpay.com/site/howitworks.html


ngpay இணைய தளத்திற்கு சென்று உங்கள் செல்பேசி எண்ணை கொடுத்தால் தரவிறக்கம் செய்யும் வழிமுறைகள் உங்கள் செல்பேசிக்கு குறுந்தகவல் வாயிலாக அனுப்பப்படும்.

Wednesday, October 7, 2009

பெங்களூரு நெல்லைக்கு தீபாவளி சிறப்பு ரயில்

தீபாவளியையொட்டி, பெங்களூரு - திருநெல்வேலி இடையே நாளை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.பெங்களூரிலிருந்து திருநெல்வேலிக்கு நாளையும்(08-October-2009) வரும் 15, 22 மற்றும் 29ம் தேதிகளிலும் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் (எண்.0691) இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு சேலம், கரூர், திண்டுக்கல் மற்றும் மதுரை வழியாக மறுநாள் பகல் 12.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.திருநெல்வேலியிலிருந்து பெங்களூருக்கு வரும் 9, 16, 23 மற்றும் 30ம் தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்.0692) இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பகல் 11.20 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இச்சிறப்பு ரயிலில் பயணம் செய்ய, இன்று (07-October-2009)முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Friday, October 2, 2009

இரயிலில் அடிக்கடி டீ, காபி, பால் குடிப்பவர்கள் கவனத்திற்கு - IRCTC- For frequent Tea Takers

IRCTC- For frequent Tea Takers