Showing posts with label தினமலர். Show all posts
Showing posts with label தினமலர். Show all posts

Wednesday, July 11, 2012

நீங்க சரியா சாப்பிடுறீங்களா?

நீங்க சரியா சாப்பிடுறீங்களா?

நன்றி :  தினமலர்( http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93)

நாடி சமன்படுத்துதல் மருத்துவர், உமா வெங்கடேஷ்: நம் உடல், நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு எனும் பஞ்சபூதங்களால் ஆனது. நம் நாக்கிலேயே, பஞ்சபூதங்களும் உள்ளன. திடீரென காரமாக சாப்பிடத் தோன்றினால், நம் உடம்பில், காற்றின் அங்கம் குறைவாக உள்ளதென அர்த்தம். இதே போல், காரம், துவர்ப்பு காற்றின் அங்கம்; இனிப்பு நிலத்தின் அங்கம்; ஆகாயம் - புளிப்புத் தன்மை, நீருக்கு - உப்பு, நெருப்புக்கு - கசப்பு. பஞ்சபூதங்களின் என்ன தன்மைகள், நம் உடம்பில் குறைகிறதோ, அது தேவை என்பதை, நம் நாக்கு சொல்லும்.சாப்பிடும் போது, மெதுவாக, மென்று சாப்பிட வேண்டும். வாயின் இருபுறமும், உணவை நன்றாக பரப்பி மெல்ல வேண்டும். அப்போது தான், உமிழ்நீர் நன்றாக ஊறி, உணவுடன் இரண்டறக் கலந்து, செரிமானத்தை எளிதாக்கும். தண்ணீர் குடித்து, 15 நிமிடம் கழித்துத் தான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டிற்குப் பின், அரை மணி நேரம் கழித்துத் தான், தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிக்கும் போது, நன்றாக வாயில் பரப்பி, அமைதியாக ருசித்து குடிக்க வேண்டும்.எந்த ஒரு காய் சாப்பிட்டாலும், அடுத்து குறைந்தபட்சம், 11 நாட்களுக்கு அதை ஒதுக்க வேண்டும். ஒரே காய்கறியை தொடர்ந்து சாப்பிட்டால், ஒரே விதமான சத்து தான் உடலுக்கு கிடைக்கும். இன்று, உணவில் துவரம் பருப்பு சேர்த்தால், நாளை பாசிப் பருப்பு சேர்க்க வேண்டும்.சாப்பிடும் போது, இரண்டு உதடும் சேர்ந்தே இருக்க வேண்டும். உள்ளுக்குள்ளேயே உணவு நொறுங்க வேண்டும். சாப்பிடும் போது பேசினால், காற்று உள்ளே போய், உணவுடன் கலந்து, வாயு சேர்ந்துவிடும்.காலையில் யோகா, மூச்சுப் பயிற்சி செய்துவிட்டு, அரை எலுமிச்சம்பழம், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும். இதில், உடலுக்கு தேவையான இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, லேசான கசப்பு கிடைக்கும். இது, உடம்பின் பஞ்சபூத சக்தியை ஈடு செய்யும்.காலையில் சத்தான உணவு, மதியம் மிதமான உணவு, இரவு மிக லேசான உணவு. இது தான், உடலை எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்க வைக்கும்!

Saturday, December 17, 2011

பால் காய்ச்ச தெரியுமா?

நன்றி : தினமலர்
உணவியல் நிபுணர் ஷைனி சந்திரன்: பாலை பலமுறை சுட வைப்பது மிகத் தவறான பழக்கம். காய்ச்சிய பாலை, 2-3 நிமிடங்களுக்கு மேல் நீண்ட நேரம் சுட வைக்கும் போது, அதில் உள்ள வைட்டமின், பி காம்ப்ளக்ஸ் சத்துக்களான, பி1, பி2, பி12 ஆகியவை ஆவியாகிவிடும். கால்சியம், வைட்டமின் சத்துக்களுக்காகத்தான் பால் குடிக்கிறோம். ஆனால், பாலை அடிக்கடி சுட வைப்பதால், அந்த சத்துக்கள் வீணாகிவிடும். பால் குடிப்பதும் வீண் தான். பசும் பாலில் தீங்கு தரும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகள் இருக்கும். அவை காய்ச்சும் போது அழிந்துவிடும். இன்று பெரும்பாலும் பாக்கெட் பாலை வாங்குகிறோம். அது ஏற்கனவே, சுத்தம் செய் யப்பட்ட பின் தான், பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகிறது என்பதால், அதை நீண்ட நேரம் காய்ச்ச வேண்டும் என்ற அவசியமில்லை. பாலைக் காய்ச்சியதும் குடித்து விடலாம். ஆறவிட்டு, மீண்டும் சூடாக்கி, சத்துக்களை அழித்த பாலைக் குடிப்பதைத் தவிர்க்கலாம். பசும் பால் வாங்குபவர்கள், பால் பொங்கியதும், உடனே இறக்கி விடாமல், 8-10 நிமிடங்கள் காய்ச்ச வேண்டும். கரண்டியால், பாலைக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் பால், 100 டிகிரி செல்சியஸ் வரை சூடாகி, தீங்கு தரும் பாக்டீரியாக்கள் அழியும். பதப்படுத் தப்பட்ட பாக்கெட் பாலில் ஏற்கனவே, பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டிருப்பதால், அதை, 6-8 நிமிடங்கள் சூடு செய்தால் போதும். பொதுவாக எந்த வகைப் பாலாக இருந்தாலும், அதை இரண்டு முறைக்கு மேல் சு ட வைக்க வேண்டாம். ஒருமுறை பாலைக் காய்ச்சியபின், அதை பிரிஜில் வைக் கலாம். காபி, டீ என தயார் செய்யும்போது, மீண்டும் மொத்தப் பாலையும் காய்ச்சாமல், எத்தனை டம்ளர் தேவைப்படுகிறதோ, அந்தளவிற்கு மட்டும் பாலை எடுத்து தயார் செய்யலாம்.

Tuesday, May 10, 2011

அன்புள்ள முதல்வருக்கு, ஆனந்தி எழுதுவது ...

நன்றி : தினமலர் 

10.05.2011 : ஐயா, வணக்கம்! ஆத்தூரை அடுத்துள்ள தலைவாசல் கூகையூர் கிராமத்தைச் சேர்ந்த, 104 வயதான உரைநூல் பேராசிரியர் அடிகளாசிரியருக்கு, மத்திய அரசு தொல்காப்பியர் விருதும், பணமுடிப்பும் அறிவித்து, அதன்படியே கொடுத்தும் விட்டது; சந்தோஷம்! இதுபற்றி தாங்கள் அடைந்த புளகாங்கிதத்தையும், பகிர்ந்து கொண்டீர்கள்; ரொம்ப சந்தோஷம்!
ஆனால், 2000வது ஆண்டில், நீங்கள் அறிவித்த, திருவள்ளுவர் விருது, பணம், இன்னமும் பலருக்கு வரவில்லையே ஐயா! மிக நீண்ட இடைவெளி காரணமாக, இந்த விருது பற்றி கிடைத்தவர்கள் கூட மறந்து இருக்கலாம்; ஆகவே, ஞாபகப்படுத்துகிறேன்.
கன்னியாகுமரியில், 2000வது புத்தாண்டு தொடக்கத்தில், 133 அடி உயர பிரமாண்ட திருவள்ளுவர் சிலையை, முதல்வராக இருந்து, திறந்து வைத்தீர்கள். அந்த விழாவில், பள்ளி சிறுவர், சிறுமியர் பலர் 1,330 திருக்குறளையும் ஒப்புவித்ததுடன், குறளின் கடைசி வரியை சொல்லி, அக்குறளை சொல்லச் சொன்னால் கூட, முழுக் குறளையும் சொல்லி, பொருளும் கூறினர். 133 அதிகாரத்தில், எந்த இடத்தில், அந்த குறள் இடம் பெறுகிறது என்றும் சொல்லி வியக்க வைத்தனர்.
இப்படி குறளை கரைத்து குடித்த, அந்த சிறுவர், சிறுமியரால், சபை மட்டுமல்ல, நீங்களும் சந்தோஷமடைந்தீர்கள். இந்த குழந்தைகள் படித்து முடிக்கும் வரை, மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்து, கைத்தட்டலையும் அள்ளினீர்கள். அந்த குழந்தைகளும், மாதம் ஆயிரம் ரூபாய் சன்மானம், இந்த மாதம் வரும், அடுத்த மாதம் வரும் என்று காத்திருந்து, காத்திருந்து கிட்டத்தட்ட, 12 வருடமாகிறது; இன்னும் தொகை வந்தபாடில்லை. குழந்தைகள் வளர்ந்தும் விட்டனர்; பலர், இதை மறந்தும் விட்டனர்!
ஆனால், இன்னமும் மறக்காத, அப்பாவி அப்பா ஒருவர், இதை ஞாபகப்படுத்தி, இப்போது அரசுக்கு கடிதம் போட்டார். மாதா, மாதம் ஆயிரம் ரூபாய் தருமளவிற்கு அரசிடம் நிதி கொட்டியா கிடக்கிறது? மொத்தத்தில் தொகுப்பூதியமாக ஒரு தொகை, பத்தாயிரமோ அல்லது கொஞ்சம் கூடுதலாகவோ தருவதற்கு ஆலோசனை நடந்துகொண்டு இருக்கிறது. ஆலோசனை முடிந்ததும், சொல்லி அனுப்புகிறோம் என்ற ரீதியில் பதில் அனுப்பியுள்ளார்கள்.
அரசிடம் நிதி கொட்டியா கிடக்கிறது, மாதா, மாதம் ஆயிரம் ரூபாய் தருவதற்கு என்று காட்டமாக எழுதிய கடிதத்தின் மை உலர்வதற்கு முன், யாரும் கேட்காமல், எவரும் வற்புறுத்தாமல், இந்திய கிரிக்கெட் அணிக்கு நான்கு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. ஆயிரத்தை விட, கோடி சிறிதா அல்லது திருக்குறள் ஒப்புவித்த சிறுவர்களை விட, கிரிக்கெட் வீரர்கள் சிரமத்தில் இருக்கின்றனரா? தெரியவில்லை... அனேகமாக, கடிதம் கிடைக்கப்பெற்ற, அந்த அப்பாவி அப்பா, மகனிடம், "இனி, திருக்குறளை விழுந்து, விழுந்து படிப்பே...' என, கேட்டு புளிய விளாறால் விளாசி இருக்கலாம்.
இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை, 65 லட்சத்திற்கு வாங்குவதற்கு காட்டிய அக்கறையை, ஏன் இதில் காட்டவில்லை என, சம்பந்தபட்ட அதிகாரிகளை, நீங்கள் ஒரு வார்த்தை கேட்கலாமே ஐயா!

மேலும் படிக்க 


Tuesday, September 7, 2010

"தமிழ் குடிமகன்' ஆக்குங்க : முதல்வருக்கு கோரிக்கை - தினமலர் செய்தி

செய்தியை படிக்க கீழுள்ள சுட்டியை சொடுக்கவும் 

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=72473

Sunday, November 22, 2009

தினமலர் - வாரமலர் இதழ்களை PDF வடிவில் தரவிறக்கம் செய்து படிப்பது எப்படி?

பழைய, புதிய தினமலர் வாரமலர் இதழ்களை PDF வடிவில் தரவிறக்கம் செய்து படிக்க
http://www.dinamalar.com/Supplementary/back_issue_vmalar.asp என்ற இணைய தளத்திற்கு செல்லவும்.

தினமலர் பிற இதழ்கள் பகுதியில், ஆனந்த விகடன், குமுதம், கல்கி, மங்கையர் மலர் போன்றவற்றிலிருந்து முக்கிய பகுதிகள் வெளியிடப்படுகின்றன.
அவற்றை http://www.dinamalar.com/Supplementary/piraithalkal.asp என்ற முகவரியில் படித்து பயன் பெறவும்.

Monday, October 26, 2009

ஸ்டெம் செல் சிகிச்சையின் மூலம் ரத்தப் புற்றுநோயை குணப்படுத்தலாம் : ஜப்பான் நிபுணர் தகவல்

சென்னை : ஸ்டெம் செல் சிகிச்சையின் மூலம் ரத்தப் புற்றுநோயை குணப்படுத்தலாம் என்று பிரபல ஸ்டெம் செல் விஞ்ஞானியும், ஆராய்ச்சியாளருமான யுகியோ நாக்கமுரா தெரிவித்துள்ளார்.இந்திய - ஜப்பான் கூட்டு முயற்சியில் இயங்கும் 'நிச்சி இன்' புத்துயிர் மருத்துவ மையம் சார்பில், சர்வதேச ஸ்டெம் செல் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய பிரபல ஸ்டெம் செல் விஞ்ஞானியும், ஆராய்ச்சியாளருமான யுகியோ நாக்கமுரா, ஜப்பான் விஞ்ஞானிகளின் ஸ்டெம்செல் மூலம், 'அப்லஸ்ட்டிக் அனிமியா' மற்றும் 'தலசிமியா' போன்ற ரத்தப் புற்றுநோய்களுக்கு ஸ்டெம்செல் மூலம் குணப்படுத்தும் முறையை கண்டுபிடித்திருப்பதாக தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், 'இந்திய - ஜப்பான் விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியில் பல புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போதைய கண்டுபிடிப்பான, '(இஈ34+)செல்ஸ்' மற்றும் 'போன் மாரோ'விலிருந்து எடுக்கப்படும் ஸ்டெம் செல் முறை ரத்த புற்றுநோயாளிகளுக்கு நல்ல மாற்றாக அமையும். இந்த கண்டுபிடிப்பில் மிருக கொழுப்பு கலப்படம் ஏதும் இல்லை' என்றார்.

நன்றி : தினமலர்

Thursday, September 17, 2009

தாலசீமியா நோயால் அவதிப்பட்ட அக்காவை தன்னுடைய ஸ்டெம் செல் மூலம் காப்பாற்றிய தம்பி



இன்று தினமலர் நாளிதழில் வெளிவந்த செய்தி.

தாலசீமியா நோய்க்கு ஸ்டெம்செல் சிகிச்சை நாட்டிலேயே முதல் முறையாக சாதனை :

சென்னை:தாலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட, எட்டு வயது பெண் குழந்தைக்கு, ஸ்டெம் செல் மூலம், இந்தியாவிலேயே முதல் முறையாக, வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்ற கோவையைச் சேர்ந்த பெண் குழந்தை, முழு ஆரோக்கியம் பெற்றுள்ளது.

மிகக் கொடூரமான பரம்பரை நோய்களில் ஒன்று தாலசீமியா. ரத்தக் குறைபாடு நோயான இது, ரத்தத்தில் ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் ஹீமோகுளோபினை வழக்கத்திற்கு மாறான வடிவத்திற்கு மாற்றும் தன்மை கொண்டது.இக்குறைப்பாட்டால், ரத்த சிவப்பணுக்கள் அதிகளவில் பாழ்பட்டு, தீவிர ரத்த சோகை ஏற்படும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தை, ஒவ்வொரு மாதமும் முழுமையாக மாற்ற வேண்டும். இந்நோயை சரியான முறையில் கவனிக்காமல் விட்டால், பெரும் ஆபத்துகளுக்கு வழிவகுக்கும்.


இந்நோய்க்கு ஒரே தீர்வாக, ஸ்டெம் செல் சிகிச்சை கருதப்படுகிறது. அதுவும், கனகச்சிதமாக பொருந்த 25 சதவீதம் மட்டுமே வாய்ப்பு.கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் - சரோஜினி தம்பதியின் எட்டு வயது மகள் தாமிரபரணி, தாலசீமியா நோயால் பாதிக்கப்பட்டிருந்தாள். சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு, பெற்றோர் இவளை அழைத்து வந்தனர். இதற்கு ஸ்டெம் செல் சிகிச்சை தான் தீர்வு எனக் கருதிய டாக்டர் ரேவதி ராஜ், ஸ்டெம் செல்லுக்காக, செந்தில்குமார் தம்பதியை, இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தினர்.


மருந்து போல், இன்னொரு குழந்தைக்கு கருத்தரித்தார் சரோஜினி. ஸ்கேன் செய்து பார்த்தபோது, அந்த கருவுக்கும் தாலசீமியா இருப்பது கண்டறியப்பட்டது. டாக்டர்களின் அறிவுரையின்படி, கரு கலைக்கப்பட்டது.


விடாமுயற்சியோடு, மீண்டும் 2008ம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்றை பெற்றனர். அதிர்ஷ்டவசமாக, அந்தக் குழந்தைக்கு தாலசீமியா பாதிப்பு இருக்கவில்லை. அக்குழந்தையின் தொப்புள் கொடி ரத்தம் சேகரிக்கப்பட்டு, ஸ்டெம்செல்கள், சென்னையில் உள்ள லைப்செல் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டன.


இரண்டு குழந்தைகளின் திசுக்களும் பொருந்துகிறதா, மேற்கொண்டு தாமிரபரணிக்கு சிகிச்சை மேற்கொள்ளலாமா என்பதை உறுதிப்படுத்த, ஹெச்.எல்.ஏ., சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சையின் முதல் படியாக, தாமிரபரணியின் உடலிலுள்ள அனைத்து எலும்பு மஜ்ஜை செல்களும், கீமோதெரபி மூலம் அழிக்கப்பட்டன. பின்னர், தம்பியின் ஸ்டெம் செல்கள் தாமிரபரணியின் உடம்பில் செலுத்தப்பட்டன.


சிகிச்சை முழு பலனளிக்கவே, தாமிரபரணி, தற்போது தாலசீமியா நோயிலிருந்து முற்றிலும் குணமடைந்துள்ளார். இனி, அந்தக் குழந்தையும், மற்ற பிஞ்சுகளைப் போலவே துள்ளி விளையாடலாம்.


இது குறித்து, லைப்செல் இன்ட்நேஷனல் நிர்வாக இயக்குனர் மயூர் அபாயா கூறுகையில், ""ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 10 ஆயிரம் குழந்தைகள் தாலசீமியா பாதிப்புடன் பிறக்கின்றன. உலகளவில் இது 10 சதவீதம். ஸ்டெம்செல் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள இந்த புரட்சிகர மாற்றத்திற்கு, நன்றி சொல்லும் தருணம் இது. தாலசீமியா மற்றும் லூகேமியா போன்ற பல்வேறு உயிர்கொல்லி நோய்களை, தற்போது அறுவை சிகிச்சையின்றி முழுவதுமாக குணப்படுத்தலாம்,'' என்றார்.தாமிரபரணியின் அப்பா செந்தில்குமார் கூறியதாவது:


என் மகள் தாமிரபரணிக்கு ஒன்றரை வயதிலிருந்தே உடல் நிலை பாதிக்கப்பட்டது. தலை முடி கொட்டிவிட்டது; விளையாட முடியாது; நடக்க முடியாது. கடந்த ஆறரை ஆண்டுகளாக, அவளுக்கு மாதம்தோறும் ரத்தம் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி, அப்பல்லோ மருத்துவனையில், என் மகள் தாமிரபரணிக்கு ஸ்டெம்செல் மாற்று சிகிச்சை கடந்த மார்ச் மாதம் செய்யப்பட்டது. தற்போது என் மகள் தாலசீமியா நோயிலிருந்து குணமடைந்துவிட்டாள். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 12.5ஆக உள்ளது. என் மகளை அடுத்த ஆண்டு பள்ளியில் சேர்க்க உள்ளேன்.இந்த ஸ்டெம்செல் மாற்று சிகிச்சைக்கு, எட்டு லட்ச ரூபாய் செலவாகும் என்று டாக்டர்கள் சொன்னதும் மற்றவர்களின் உதவியை நாடினேன். தினமலர் நாளிதழில் இலவச விளம்பரமும் செய்யப்பட்டது. இதன் வழியாக பலர் மூலம் நிதி உதவி கிடைத்தது. பல்வேறு நிலைகளில் எனக்கு உதவிய மற்றும் வழிகாட்டிய அனைவருக்கும் என் நண்பர்களுக்கும் இந்தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு செந்தில்குமார் உருக்கமாக கூறினார்.

Dinamalar URL : http://www.dinamalar.com/new/General_detail.asp?news_id=17064

Friday, September 4, 2009

பம்மல் அர்க்கீஸ்வரர் கோவிலில் ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

பல்லாவரம்:சென்னை அருகே பம்மலில் உள்ள 1,000 ஆண்டுகள் பழமையான அர்க்கீஸ்வரர் கோவிலில், வசந்த மண்டபம் கட்டும் பணிக்கு பள்ளம் தோண்டிய போது, நேற்று ஒரே நாளில் 11 பழங்கால ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. சென்னையை அடுத்த பம்மல், அண்ணா சாலையில் அமிர்தாம்பிகை சமேத அர்க்கீஸ் வரர் கோவில், ஒன்பது ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.


1,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில், பல்லவர்கள் காலத்தில் எடுக்கப் பிக்கப்பட்டது.இங்கு சூரியம்மன், அமிர் தாம்பிகை, சித்தாலம்மன் உள் ளிட்ட பல சன்னிதிகள் உள்ளன. கோவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், பரம்பரை அறங் காவலர் கோவிலை நிர்வகித்து வருகிறார்.இக்கோவில் வளாகத்தில் 60 அடிக்கு 30 அடி வீதம் எட்டு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வசந்த மண்டபம் கட்ட திட்டமிடப்பட்டது. கடந்த மாதம் 26ம் தேதி இதற்கான பணிகள் துவங்கப்பட்டன.


பில்லர்கள் அமைப்பதற்காக 16 குழிகள் தோண்டப்பட்டன.நேற்று காலை 11 மணிக்கு ஊழியர்கள் 15வது குழியை தோண்டும் பணியில் ஈடுபட் டனர். அப்போது ஆறாவது அடியில் சிலை ஒன்று கண் டெடுக்கப்பட்டது.தொடர்ந்து அதே குழியில் அருகருகே சுவாமி சிலைகள் கிடைத்த வண்ணம் இருந்தன.


ஒரே நாளில் 34.5 கிலோ எடை கொண்ட பிள்ளையார் சிலை, 46.3 கிலோ சோமாஸ்கந்தர் சிலை, 19.3 கிலோ சோமாஸ்கந்தர் அம்மன் சிலை, ஒரு கிலோ கந்தர் சிலை, 36 முதல் 55 கிலோ வரை எடை கொண்ட மூன்று தனி அம்மன் சிலைகள், 26.4 கிலோ எடை கொண்ட சண்டிகேஸ்வரர் சிலை, 21.2 கிலோ எடை கொண்ட நடன கோலத்தில் உள்ள ஞானசம்பந்தர் சிலை, 28.2 கிலோ எடை கொண்ட மாணிக்கவாசகர் சிலை, 25.6 கிலோ எடை கொண்ட திருநாவுக் கரசர் சிலை ஆகிய 11 சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.


சிலைகள் கண்டெடுக்கப் பட்டது குறித்து தாம்பரம் தாசில்தார் கோவிந்தராஜன், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் தொல் லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதிகாரிகள், சிலையை பார்வையிட்டு, ஐம்பொன் சிலை கள் என்று அறிவித்தனர். இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் சிலைகள் கிடைத்ததால், அதிகாரிகள் சிலையை மீட்டு, பராமரிக்கும் படி கோவில் பரம் பரை அறங்காவலரிடம் ஒப் படைத்தனர்.சிலைகள் உருவாக்கப்பட்ட காலம் குறித்தும், ஐம்பொன் சிலைகள் தானா என்பதை உறுதி செய்யவும் ஆய்வு நடத்த தொல் லியல் துறை முடிவு செய்துள்ளது.
Source : http://www.dinamalar.com/new/district_main.asp?ncat=Chennai#224426
Thanks : தினமலர்

Saturday, August 15, 2009

தினமலர் வாரமலர் - அந்துமணி பா.கே.ப. வில் படித்த நகைச்சுவை

ரயில் ஏறிய ஒரு விருந்தாளி, வழியனுப்ப வந்தவரிடம் குறைபட்டுக் கொண்டார்... "நான் ரயிலுக்கு டிக்கட் ரிசர்வ் பண்ணப் போனேன்... அப்போதே சொல்லியிருக்கலாம்... திரும்பி வந்து டிரஸ்சை எல்லாம் பெட்டியில் அடுக்கினேன்... அப்போது சொல்லியிருக்கலாம்... நீங்க சொல்லலே... அப்புறம் குளித்து, டிரஸ் பண்ணி கிளம்பினேன்... அப்போதும் சொல்லலே... பேசாம இருந்துட்டீங்க... அப்புறம், ஸ்டேஷனுக்கு வர, ஆட்டோ பிடிக்கப் போனேன்... அப் போதும், "கம்'முன்னு இருந்தீங்க: வாயே தொறக்கலே... அப்புறம், உங்க குடும்பத்திலே எல்லார் கிட்டேயும்,"போய்ட்டு வரேன்'ன்னு சொல்லிட்டு புறப்பட்டேன்... அப்போவும் சொல்லாம, பேசாம இருந்தீங்க... இப்போ... நான் ரயில்லே ஏறி உட்கார்ந்து, கார்டு விசில் ஊதி, பச்சைக் கொடியும் காட்டி, வண்டியும், "மூவ்' ஆயிட்டு. இப்போ போயி, "இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போகலாம்...'ன்னு சொல்றீங்களே... இது உங்களுக்கே நல்லாயிருக்கா...'


இதை படித்ததும் திருமண மண்டபத்தில் நடந்த சுவையான சம்பவம் நினைவுக்கு வந்தது.

நானும் , என் நண்பனும் திருமண வீட்டிற்கு சென்றிருந்தோம். உணவு கூடத்தில் பரிமாற ஆட்கள் தேவைப்பட்டதால் நாங்கள் சென்று உதவி செய்தோம். என் நண்பன் இயல்பிலேயே ஒரு குறும்புக்காரன். நான் இட்லி பரிமாறிக் கொண்டிருந்தேன். என் நண்பன் சாம்பார் ஊற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தான். ஒரு பெண் சாப்பிட்டு முடிக்கும் தருவில் இருந்தாள். அவளது இலையில் இரண்டு மூன்று இட்லி துண்டுகள் எஞ்சி இருந்தன. அந்த பெண் என் நண்பனிடம் சாம்பார் ஊருமாறு கூறினாள்.

அவனும் சென்று கரண்டி நிறைய சாம்பார் எடுத்தான். அதை ஊற்றப் போகும் முன்பு அந்த பெண் போதும் போதும் என்றாள்.அவனும் சாம்பார் ஊற்றாமலாயே சாம்பார் வாளியை தூக்கி கொண்டு வேறு வரிசைக்கு சென்று விட்டான்.

இதை வந்து அவன் எங்களிடம் கூறவும் அன்று முழுவதும் ஒரே சிரிப்புத்தான் ...