Showing posts with label வேலைவாய்ப்பு. Show all posts
Showing posts with label வேலைவாய்ப்பு. Show all posts

Thursday, November 19, 2009

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (TNPL - TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED) வேலைவாய்ப்பு

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 25/11/2009

மேலும் விவரங்களை கீழ்க்கண்ட சுட்டிகளை சொடுக்கி பார்க்கவும்.

http://www.tnpl.com/Careers/hr%20advt%2011nov09.pdf

http://www.tnpl.com/Careers.aspx

http://docs.google.com/fileview?id=0By5vkE3ynQBjNjliNzFlYTYtODA5ZS00YmNmLWJjOGYtZGQyYzI3NjI5NTRl&hl=en

வெப்துனியா சென்னை கிளை அலுவலகத்தில் மொழிபெயர்ப்பாளர் பணிவாய்ப்பு

இந்தூர் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வெப்துனியா.காம் நிறுவனத்தின் சென்னை கிளை அலுவலகத்தில் மொழிபெயர்ப்பாளர்களைத் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், ஆங்கிலத்தை சரியாகப் புரிந்து கொண்டு அதனைத் சொற்பிழை, வாக்கியப் பிழையின்றி தமிழில் எழுதும் திறன் பெற்றிருப்பதுடன், சிக்கலான ஆங்கில வாக்கியங்களை எளிமையாக மொழிபெயர்க்கும் திறனும் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் துறையில் (தமிழ்) முன்அனுபவம் இருப்பது கூடுதல் தகுதியாகும்.

சிக்கலான பத்திகள் மற்றும் ஆங்கில கூட்டு வாக்கியங்களைப் புரிந்து கொள்ளும் திறன், அடிப்படை கணினி அறிமுகம் (MS Office, Windows XP), தமிழ்/ஆங்கில அடிப்படைத் தட்டச்சு பயிற்சி பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கூடுதல் தகுதிகள்:

* மொழிபெயர்ப்புத் துறையில் முன் அனுபவம்.

* தமிழ் தட்டச்சு அனுபவம்.

* தொழில்நுட்ப, மருத்துவ ஆவணங்களை மொழிபெயர்த்த அனுபவம் அல்லது மொழிபெயர்க்கும் திறன்

* தமிழ் வலைத்தளங்கள் பார்த்தல், வலைப்பதிவு எழுதுதல் போன்றவற்றில் பழக்கம்.

* தமிழ் யுனிகோட், ஃபாண்ட் தொடர்பான அறிதல்

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (மொழி பட்டப்படிப்பு கூடுதல் தகுதி).

Translator: M / F, age no bar, qualified, fresh / Experienced, to translate English to Tamil, Salary: Commensurate with Talent and Experience.

Contact: HR - Webdunia.com (India) Pvt. Ltd. Phone: 044- 2372 4781 (5 Lines), Fax: +91-44-2372 4769. Mail: hrsouth@webdunia.net

Monday, November 2, 2009

நோக்கியா நிறுவனத்தில் +2 படித்த பெண்களுக்கு வேலைவாய்ப்பு

சென்னை: நோக்கியா நிறுவனத்தில் +2 படித்த பெண்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, நோக்கியா நிறுவனத்திற்கு 1000 பெண்களை ஆப்ரேட்டர் டிரெய்னியாக தேர்வு செய்யும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாமினை காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7.11.2009 (சனிக்கிழமை) காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடத்த உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. மாத ஊ‌தியம் ரூ.4400/- மற்றும் இலவச உணவுடன் ரூ.1000/-ற்கான உணவுப்படி, இலவச மருத்துவ வசதி, 60 கி.மீ சுற்றளவிற்கு இலவச போக்குவரத்தும் அளிக்கப்படும். +2 ல் 60 சதவீத மதிப்பெண் பெற்ற 18 முதல் 23 வயதிற்குட்பட்ட பெண்கள் தங்கள் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை அன்றே வழங்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

நன்றி : தினமலர்
URL : http://www.dinamalar.com/latest_news.asp#26694