Showing posts with label கவிக்குயில் சரோஜினி நாயுடு. Show all posts
Showing posts with label கவிக்குயில் சரோஜினி நாயுடு. Show all posts

Monday, August 17, 2009

கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் தந்தையார் பெயர் என்ன? - பள்ளியில் நடந்த நகைச்சுவை சம்பவம்



நான் ஏழாம் வகுப்பு படித்த போது, ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு பயிற்சிக்காக ஒரு ஆசிரியை எங்கள் பள்ளியில் சேர்ந்திருந்தார்.எங்கள் வகுப்பிற்கு தமிழ் பாடம் எடுக்க வந்தார். முதல் நாள் கவிக்குயில் சரோஜினி நாயுடுவை பற்றிய பாடம் நடத்தினார். கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் தந்தையார் பெயர் அகோரனாத் சட்டோ பாத்தியாயா என்பதாகும்.

எங்கள் வகுப்பில் சரவணன் என்று ஒரு மாணவன் இருந்தான். அவன் மற்ற மாணவர்களை விட மிகவும் ஒல்லியாக இருப்பான். வேகமாக காற்று வீசினால் பறந்து விடுவான். அந்த அளவிற்கு ஒல்லியாக இ்ருப்பான்.

ஆசிரியை மறுநாள் வகுப்பிற்கு வந்து முதல் நாள் நடத்திய பாடத்திலிருந்து சில கேள்விகளை கேட்டார். அப்பொழுது சரவணனை எழுப்பி கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் தந்தையார் பெயர் என்ன? என்று கேட்டார். எங்கே தவறாக பதில் சொன்னால் ஆசிரியை பிரம்பால் அடித்து விடுவாரோ என்று நடுங்கி கொண்டே எழுந்தான். ஆசிரியை திரும்பவும் கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் தந்தையார் பெயர் என்ன? என்று கேட்டார். அவன் உடனே அகோரனாத் சட்டைய பாத்தியாய்யா என்று பதிலளித்தான். உடனே வகுப்பறை சிரிப்பில் அதிர்ந்தது.

சரோஜினி நாயுடு பற்றிய தகவல்களை கீழ்க்கண்ட சுட்டிகளில் சென்று தெரிந்து கொள்ளவும்.
http://en.wikipedia.org/wiki/Sarojini_Naidu
http://ta.wikipedia.org/wiki/சரோஜினி_நாயுடு
http://www.tamilish.com/தலைசிறந்த_பெண்கள்_-_சரோஜினி_நாயுடு/