Monday, September 7, 2009
தமிழ்நாடு அரசு சொகுசுப் பேருந்துகளில் மூட்டைப் பூச்சிகள் தொல்லை
தமிழ்நாடு அரசு சொகுசுப் பேருந்து - மூட்டை பூச்சி கடி
கண்டக்டரிடம் மூட்டை பூச்சி கடிக்கிறதே என்று கேட்டால், ரூ.1000 ஒதுக்கினால் ரூ.10 க்கு மட்டும் மருந்து அடித்து விட்டு மீதி பணத்தை அதிகாரிகள் சுருட்டி கொள்கின்றனர் என்று காரணம் சொல்கிறார். இப்படி இருந்தால் தமிழ்நாடு அரசு சொகுசுப் பேருந்து எப்படி உருப்படும்? கர்நாடக அரசு சொகுசுப் பேருந்தை பார்த்தால் பளபள வென்று ஜொலிக்கிறது.
திருந்துவார்களா தமிழ்நாடு அரசு சொகுசுப் பேருந்து அதிகாரிகள்?
இது குறித்த எனது முந்தைய பதிவை இந்த சுட்டியில் காணலாம்.
http://blogpaandi.blogspot.com/2009/07/blog-post.html
இன்று தினமலரில் வந்த செய்தி
அரசு அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில் மூட்டைப் பூச்சிகள் * அலர்ஜி ஏற்பட்டதால் போட்டிகளில் தோல்வி
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில், மூட்டைப்பூச்சிகள் ராஜ்யம் நடத்துகின்றன. மதுரையில் நடந்த தேசிய போட்டியில் பங்கேற்க, அல்ட்ரா டீலக்ஸ் பஸ்சில் சென்ற மாணவியர், மூட்டை பூச்சி கடியால் அலர்ஜி ஏற்பட்டு, போட்டியில் தோல்வியடைந்தனர்.தமிழக அரசு, தனியார் சொசுசு பஸ்களுக்கு இணையாக, அரசு போக்குவரத்து கழகம் மூலம், 2007ம் ஆண்டு முதல்,"அலட்ரா டீலக்ஸ்' சொகுசு பஸ் இயக்கி வருகிறது.
தனியார் பஸ்களை விட 50 சதவீதம் குறைந்த கட்டணத்தில், அதே நேரத்தில் தனியார் பஸ்களில் உள்ள "ஏசி'., பேன், "எல்சிடி', "டிவி' உள்ளிட்ட சொசுகு வசதிகள் பயணிகளுக்கு செய்து கொடுக்கப்பட்டது."அலட்ரா டீலக்ஸ்' பஸ்கள் விட்ட துவக்க காலத்தில், பஸ்களை போக்குவரத்து கழகம் தினமும் பராமரித்து வந்தது. சட்டசபையில் கூட இம்மாதிரி பிரச்னையை தீர்க்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல் கூறப்பட்டது.
தற்போது,போதிய பராமரிப்பு இல்லாமல், பஸ்களில் மூட்டை பூச்சி தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால், பயணிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.கடந்த 2ம் தேதி, மதுரை வி.கே.கே., மெட்ரிக் பள்ளியில், பள்ளி மாணவ, மாணவியருக்கு இடையேயான தேசிய டேபிள் டென்னிஸ் போட்டி நடந்தது.
இதில், கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பில், ஓசூர் மகரிஷி மெட்ரிக் பள்ளி ப்ளஸ் 1 மாணவி சுமத்ரா (16), கீர்த்திப்ரியா (16) ஆகியோர் சூப்பர் சீனியர் பிரிவிலும், டி.வி.எஸ்., மெட்ரிக் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி கீர்த்திகா ராஜன், சப்-ஜுனியர் பிரிவிலும், விளையாட சென்றனர். செப்.,1ம் தேதி இரவு, ஓசூரில் இருந்து மதுரை சென்ற அரசு "அலட்ரா டீலக்ஸ்' சொகுசு பஸ்சில் உறவினர்களுடன் சென்றனர்.
பஸ்சில் பயணம் செய்த சிறிது நேரத்தில், சீட்டுகளுக்கு அடியில் இருந்த மூட்டை பூச்சிகள், மாணவியர் உள்ளிட்ட பயணிகளை பதம் பார்த்தது.இதனால், இரவு முழுவதும் மாணவியர் தூங்க முடியாமல் கடும் அவதியடைந்தனர். மறுநாள் காலை மதுரை சென்றதும், மாணவியர் சுமத்ரா, கீர்த்தி ப்ரியா ஆகியோருக்கு மூட்டை பூச்சி கடியால் அலர்ஜி ஏற்பட்டது. தூக்கமின்மையால் அவர்களுக்கு பெரும் களைப்பும் உண்டாகி விட்டது.
"தேசிய போட்டியில் வெற்றி பெற வேண்டும்' என்ற கனவுடன் மதுரை சென்ற மாணவியர், உடல் நிலை ஒத்துழைக்காததால், தோல்வி அடைந்தனர். மாணவி கிருத்திகா ராஜன் மட்டும் வெற்றி பெற்றார். பாதிக்கப்பட்ட மாணவி சுமத்ரா கூறியதாவது:சிறு வயதில் இருந்து மாவட்ட, மாநில மற்றும் தேசிய போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்று உள்ளேன். கடந்த முறை இதே போட்டியில் சீனியர் பிரிவில் விளையாட சென்ற நான், தங்கப்பதக்கம் பெற்றேன்.
இந்தமுறையும் நிச்சயம் தங்கப்பதக்கம் பெறுவேன் என்று நம்பினேன். அதற்காக தீவிர பயிற்சி எடுத்தேன். "அல்ட்ரா டீலக்ஸ்' பஸ்சில் மூட்டை பூச்சி கடியால் கை, கழுத்து பகுதியில் அரிப்பு ஏற்பட்டு, என்னால் போட்டியில் விளையாட முடியவில்லை.தலை சுற்றியபடி வந்ததால், போட்டியில் தோல்வி அடைந்தேன். அரசு பஸ்சில் சென்றதால், பலநாள் பயிற்சி வீணாகி விட்டது.இவ்வாறுக மாணவி சுமத்ரா தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
வணக்கம்..
நான் சென்ற மாதம் நாகர்கோவிலிருந்து பெங்களூர் வருகையில் 17 மணிநேரம் மூட்டைப் பூச்சி கடியில் தான் வந்தேன். மிகக் கொடுமை.
பேருந்த இல்லாததால் சுத்தம் செய்யப்படாத பேருந்தை எடுத்து வந்ததாக நடத்துனர் விளக்கம் அளித்தார்.
உலகத் தமிழ் முன்னூக்கி
(Global Tamil Startups)
வலைக்குழு : http://groups.google.com/group/Global-Tamil-Startups
வலைப்பூ : http://globaltamilstartups.blogspot.com/
மின்னஞ்சல் : Global-Tamil-Startups@googlegroups.com
உரையாடல் : tamilstartups@gmail.com
நானும் ஒரு எட்டு மாதத்திற்கு முன் தமிழ்நாடு அரசு பேருந்து UD(ultra deluxe) ல் பல சமயம் பயணம் செய்ய நேர்ந்துள்ளது அந்த சமயத்தில் மூட்ட பூச்சி தொல்லையை அனுபவித்திருக்கிறேன்.அதற்க்கு பிறகு தமிழ்நாடு அரசு பேருந்து UD(ultra deluxe) ல் பயணம் செய்வதை தவிர்த்துவிட்டேன்.
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
நானும் இதே அவஸ்தையை ஒரு தனியார் பேருந்தில் அனுபவித்தேன் .மதுரையிலிருந்து சென்னை செல்லும் பேருந்து .பெயர் குறிப்பிடவா ????????????.இரவு முழுவதும் தூக்கம் இல்லை. மறுநாள் அலர்சி . நான்கு நாட்கள் அதனால் அவதி. பேருந்து பயணம் என்றாலே யோசிக்க வைக்கிறது ????????????????
இதற்க்கு மிக முக்கியமான காரணம் மிக சரியான ஒரு பூச்சி தடுப்பு நிறுவனத்தை மூட்டை பூச்சி தெளிப்போனை தெளிக்க அனுமதிக்காதே ஆகும். சென்னையில் பல நிறுவனங்கள் உள்ளன இதில் சென்னை பெஸ்ட் கண்ட்ரோல் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனம் மிகசிறப்பான சேவை செய்வார்கள், அவர்களை நான் என் மாமாவின் தொழிற்சாலையிலும் அவரின் சென்னை ஹோடலிலும் பார்த்து உள்ளேன். அவர்களை தொடர்புகொண்டேன் நீங்கள் பஸ்களுக்கு மூட்டை பூச்சி மருந்து அடிக்கலாமே என்று கேட்டதற்கு அவர்களின் பதில் எனக்கு ஆச்சரியமான உண்மையை சொல்லியது..நாங்கள் இலவசமாகவே மூட்டை பூச்சி மருந்து அடிசிதர ரெடி (எங்களுக்கு பயணிகளிடம் இருந்து பிசினஸ் கிடைக்கும்) அதிகாரிகள் எங்களை சரியான அதிகாரியை பார்க்க அனுமதிப்பது இல்லை. காரணம் மூட்டை பூச்சி மருந்து அடிச்சதும் பஸ்ஸை கழுவ ஆள் இல்லையாம்?
Post a Comment