Tuesday, September 8, 2009
கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுமி பலி
கர்நாடகா பிஜப்பூர் மாவட்டத்தில் தேவரனிம்பர்க் என்னும் கிராமத்தில் காஞ்சனா என்னும் 4 வயது சிறுமி 31-08-2009 திங்கள் கிழமை அன்று மதியம் 12.30 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்து விட்டாள். அவள் 45 அடி ஆழத்தில் மாட்டிக் கொண்டாள். மீட்பு பணிக்கு 4 JCB இயந்திரங்கள் உபயோகப்படுத்தப்பட்டன. அந்த இடத்தில பாறைகள் அதிகமாக இருந்ததால் மீட்பு குழுவினரால் ஆழ்துளை கிணற்றின் அருகில் விரைந்து பள்ளம் தோண்ட முடியவில்லை. அந்த இடத்தில மழை பெய்ததால் மீட்பு பணிகள் மேலும் தாமதமாயின. பாறைகளை தகர்க்க வெடி மருந்துகளை பயன்படுத்தினர். கடைசியில் 06-09-2009 ஞாயிறு காலை அவர்களால் சிறுமியின் உயிரற்ற உடலையே மீட்க முடிந்தது. இந்த மீட்பு பணி மொத்தம் 160 மணி நேரம் நீடித்தது.
ரூ.50000 செலவழித்து ஆழ்துளை கிணறு போடுபவர்கள், ரூ.50 செலவழித்து ஒரு இரும்பு மூடி போட்டிருந்தால் அந்த குழந்தையின் உயிர் போயிருக்காது. இனிமேலாவது அரசு தகுந்த சட்டங்களை இயற்றி இது போல நிகழாமல் தடுக்க வேண்டும்.
http://www.deccanchronicle.com/bengaluru/kanchana%E2%80%99s-body-found-264
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment