Wednesday, October 7, 2009

பெங்களூரு நெல்லைக்கு தீபாவளி சிறப்பு ரயில்

தீபாவளியையொட்டி, பெங்களூரு - திருநெல்வேலி இடையே நாளை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.பெங்களூரிலிருந்து திருநெல்வேலிக்கு நாளையும்(08-October-2009) வரும் 15, 22 மற்றும் 29ம் தேதிகளிலும் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் (எண்.0691) இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு சேலம், கரூர், திண்டுக்கல் மற்றும் மதுரை வழியாக மறுநாள் பகல் 12.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.திருநெல்வேலியிலிருந்து பெங்களூருக்கு வரும் 9, 16, 23 மற்றும் 30ம் தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்.0692) இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பகல் 11.20 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இச்சிறப்பு ரயிலில் பயணம் செய்ய, இன்று (07-October-2009)முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

3 comments:

ராமலக்ஷ்மி said...

அவ்வப்போது இப்படி சிறப்பு ரயில் கண்ணாமூச்சிதான். எப்போதுதான் ரெகுலரா பெங்களூர் டு திருநெல்வேலிக்கு டைரக்ட் ட்ரெயின் விடுவாங்களாம்? நானும் 18 வருஷமா பாத்துட்டே இருக்கேன்.ஊஹூம்:(!

கலையரசன் said...

திருநெல்வேலிகாரங்களுக்கு உபயோகமான செய்தி..

தமிழ் அஞ்சல் said...

ரயில தொரத்திட்டு தான் போவனும் அவ்வளவு கூட்டம் இருக்கும்