Monday, August 31, 2009

இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, சுதா தம்பதியரின் மகள் திருமண நிகழ்ச்சி

இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, சுதா தம்பதியரின் மகள் திருமண நிகழ்ச்சி
இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, சுதா தம்பதியரின் மகள் திருமண நிகழ்ச்சி
பெங்களூரில் நேற்று காலை (30-08-2009) இன்போசிஸ் நிறுவனர் திரு.நாராயண மூர்த்தி, சுதா தம்பதியரின் மகள் திருமணம் எளிய முறையில் நடந்தது. மதியம் நடந்த வரவேற்பு நிகழ்ச்சி லீலா பேலஸ் ஹோட்டலில் நடை பெற்றது. வரவேற்பு நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் அதிகமான வி.ஐ.பி கள் கலந்து கொண்டு மணமக்கள் அக்சதா-ரிஷி க்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Friday, August 28, 2009

பேராசை பெரு நஷ்டம் - The black hole

காணொளி


Wednesday, August 26, 2009

அன்னை தெரசாவின் 99 வது பிறந்த நாள்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
-திருவள்ளுவர்.


அன்னை தெரசா

இன்று (26-08-2009) அன்னை தெரசாவின் 99 வது பிறந்த நாளாகும். கல்கத்தா நகரில் இன்று அவருடைய பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நடிகர் பார்த்திபன் தன்னுடைய கிறுக்கல்கள் என்ற புத்தகத்தில் அன்னையை பற்றி கீழ்கண்டவாறு
கவிதை எழுதி இருப்பார். இது நான் மிகவும் ரசிக்கும் கவிதை.

நீ கருவுற்றிந்தால் ஒரு குழந்தைக்கு தான் தாயாகி இருப்பாய்
ஆனால்
நீ கருணையுற்றதால் பல்லாயிரம் குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறாய்.


மேலும் அன்னையை பற்றி தெரிந்து கொள்ள கீழ் கண்ட தளங்களுக்கு சென்று பார்க்கவும்.
http://ta.wikipedia.org/wiki/அன்னை_தெரேசா
http://en.wikipedia.org/wiki/Mother_Teresa


New Karakaatakaaran

The most  popular commedy ( if it happens in software field................)

 


Goundamani is the project leader and Senthil is in

 his team.  One  day he calls Senthil to do a module.


Goundamani: Dai, Rendu byte allocate pannitu vaa.

 Senthil   : Integeraa... floata..

 Goundamani: Velakenna.. Integer byte dhaan da.

 Senthil goes to the command prompt and types a

 program.

 Senthil: Enga annan rendu byte allocate panna

 sonnaru..

 System : Ungannan enna supervisoraa.. malloc

 command koduthaa evan venaalum allocate pannalaam.

 Senthil: Sari, evvalavu byte allocate aagum.

 System : 2 intukku 8 byte.

 Senthil: 8 bytekku 2 int.

 System : 2 intukku 8 byte.

 Senthil: 8 bytekku 2 int.

 Senthil: Aiyo, unnoda rodhanayaa pochu.. allocate

 panniko..


Senthil takes two bytes but frees one bytes and

 this causes a system crash.  

Goundamani comes and looks at the program

 crash.He decides to debug and comes to the point where it crashes.

 

 Goundamani: Dai, naan unnai enna panna sonnen?

 Senthil   : Rendu byte allocate panna sonneenga

 Goundamani: Oru byte indha irukku innoru byte enga?

Senthil   : Andha innoru byte dhaane idhu..

 Goundamani: Ch.. dai, naan unnai enna panna sonnen?

 Senthil   : Rendu byte allocate panna sonneenga.

 Goundamani: System allocate pannicha?

 Senthil   : Pannichu.

 Goundamani: Oru byte indha irukku.. Innoru byte

 enga...

 Senthil   : Andha innoru byte dhaane idhu..

 Goundamani: aadinggg....

 

 Goundamani gets wild and the other team members

 tried to control him.

 Junior Baliah, the tech lead, comes.

 

 Jr. Baliah: Enna anna, ippadi panreenga.  Avan

 namma setu?

 Goundamani: Enna setu, periya shaving setu.. rendu

 byte allocate panna theriyalai..

 Jr. Baliah: Avan chinna payan, ippa dhaan teamla serndhirukkaan..

 ippadi kettaa eppadi solluvaan.  Naan

 kekkaren..

              Thambi, annan unnai ennai panna

 sonnaaru..

  Senthil   : rendu byte allocate panna sonnaaru..

  Jr. Baliah: Allocate panniyaa?

  Senthil   : Pannene..

  Jr. Baliah: Oru byte indha irukku.. ha ha.. andha..

 rendavadhu byte

 enga

              irukku..

  Senthil   : Andha rendavadhu byte dhaane idhu...

  Goundamani: Adey...

 

  The documentation head Kovai Sarala comes.

 

  K. Sarala : Enna inga sandai.. Enna inga sandai..

  Teammate  : Onnum illaika.. Annan rendu byte

 allocate panna sonnaar..

              oru byte indha irukku.. innoru byte

 enganu ketta andha

              innoru byte thaanga idhunu solraar..

  K. Sarala : Irunga naan kekkaren..  Indha, Annan

 unnai ennai panna

              sonnaaru..

  Senthil   : Rendu byte allocate panna sonnaaru..

  K. Sarala : Allocate panniya?

  Senthil   : Pannenne..

  K. Sarala : System koduthicha?

  Senthil   : Check pannene.

  K. Sarala : Oru byte indha irukku..  Innoru byte

 karumam enge...

  Senthil   : Andha innoru byte dhaanga idhu..

  Goundamani: Adey unnai naan midhikaame vida poradhu

 illai..

  K. Sarala : Oru byteukku ivvalavu periya

 prachanaya?

  Goundamani: Enna byte pathi sarva saadharanama

 sollitte... Indha byte

              vishyathinaale.. machines renda pirinji

 onnu big endianu

              innonu little endianu irukkudhunga..

 adhu machinela idhu

              softwarela.. aana prachanai ellaam onnu

 dhaan.. Dey, udanga

 

              da..Ada, udungadangren..

 

  Goundamani goes near Senthil.

 

  Goundamani: Dai, unnai naan enna allocate panna

 sonnen?

  Senthil   : byte allocate panna sonnenga.

  Goundamani: Enna byte?

  Senthil   : Integer bytu.

  Goundamani: Evvalo byte mothama?

  Senthil   : 8 byte.

  Goundamani: 8 bytekku evvalu integer?

  Senthil   : Rendu

  Goundamani: System koduthicha?

  Senthil   : Koduthiche..

  Goundamani: Ethana byte koduthichu?

  Senthil   : Rendu integer bytu..

  Goundamani: Onnu indha irukke.. innonu enga?

  Senthil   : Ada, indha innonu dhaanga idhu..

  Goundamani: Dai...

 

  Senthil runs and everybody run behind him..



Love Cricket? Check out live scores, photos, video highlights and more. Click here.

Tuesday, August 25, 2009

நோக்கியாவினுடைய முதல் மடிக் கணினி - புக்லெட் 3G




கடந்த சில மாதங்களாக எதிர்பார்த்ததை போன்று நோக்கியா தன்னுடைய முதல் மடிக் கணினி - புக்லெட்3G பற்றி அறிவித்துள்ளது.

நோக்கியா புக்லெட்3G இன்டெல் ஆடம் ப்ராசசர் மற்றும் விண்டோஸ் இயங்கு தளத்தை அடிப்படையாக கொண்டு, 12 மணி நேர மின்கல சக்தியுடன் உருவாக்கப்படும் என்று தெரிகிறது. மற்ற முழுமையான விவரங்களை நோக்கியா விரைவில் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




காணொளி


மைக்கேல் ஜாக்சன் மரணத்திற்கு காரணம்

மைக்கேல் ஜாக்சன் கீழ்க்கண்ட படங்களை பார்த்து ஹார்ட் அட்டாக் வந்து இறந்திருப்பாரோ என்று சந்தேகிக்கப்படுகிறது .

V

V



V

V



V

V



V








குறிப்பு: இது எனக்கு வந்த மின்னஞ்சல்.

Monday, August 24, 2009

நெல்லை எக்ஸ்பிரஸின் இணைப்பு பாசஞ்சர் ரயில் தொடக்கம்

திருச்செந்தூர்: இன்று முதல் புதிதாக நெல்லை எக்ஸ்பிரசுக்கான இணைப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த பயணிகள் ரயில் நெல்லையிலிருந்து காலை 9.35 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 11.15க்கு திருச்செந்தூர் செல்லும். இதேபோல திருச்செந்தூரில் மாலை 4.10 மணிக்கு புறப்படும் மற்றோரு பயணிகள் ரயில் மாலை 5.55 மணிக்கு நெல்லைக்கு வந்து சேரும்.

இதுகுறித்து நெல்லை ரயில் நிலைய மேலாளர் கூறுகையில், நெல்லையிலிருந்து திருச்செந்தூருக்கு காலை 7 மணி, முற்பகல் 11.25, மாலை 6.15 மணிக்கு பயணிகள் ரயில் திருச்செந்தூருக்கு செல்கிறது.

இதேபோல திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு 3 ரயில்கள் இயக்கப்படுகிறது.

இன்று முதல் புதிதாக நெல்லை எக்ஸ்பிரசுக்கான இணைப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த பயணிகள் ரயில் நெல்லையிலிருந்து காலை 9.35 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 11.15க்கு திருச்செந்தூர் செல்லும்.

இதேபோல திருச்செந்தூரில் மாலை 4.10 மணிக்கு புறப்படும் மற்றோரு ரயில் மாலை 5.55 மணிக்கு வந்து சேரும்.

இன்று மாலை திருச்செந்தூரில் நடைபெறும் விழாவில் தூத்துக்குடி எம்.பி. ஜெயதுரை எம்பி கொடியசைத்து ரயில்வே சேவையை துவக்கி வைக்கிறார் என்றார்.
Source: www.thatstamil.com
Thanks: Thatstamil

Friday, August 21, 2009

15 லட்சம் குடும்பங்கள் ஒரு வருடம் பயன்படுத்த தேவையான கோதுமை, பஞ்சாபில் வீணாக்கப்பட்ட செய்தி

ஜப்பானிய அழகிகளும் நூதன விவசாயமும்
http://padmahari.wordpress.com/2009/08/21/ஜப்பானிய-அழகிகளும்-நூதன
என்ற பதிவை மேற்கண்ட சுட்டியில் படித்தேன்.வரவேற்க தகுந்த விஷயம். நம்ம நாட்டிலும் மீண்டும் எப்போது விவசாயப் புரட்சி திரும்புமோ?

ஆனால் டைம்ஸ் ஆப் இந்தியாவில் இன்று வந்த செய்தி மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.

15 லட்சம் குடும்பங்கள் ஒரு வருடம் பயன்படுத்த தேவையான கோதுமை, பஞ்சாபில் வீணாக்கப்பட்ட செய்தி மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இதை எல்லாம் கவனிக்க வேண்டிய விவசாய அமைச்சரோ கிரிக்கெட் வேலைகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார்.



NEGLIGENCE IN THE TIME OF DROUGHT
Food enough for 15L families for a year wasted
As India Stares At Drought, Food Bowl Punjab Loses 18 Lakh Tonnes Of Wheat To Callousness
Priya Yadav | TNN

Khamanu (Punjab): Irony can’t get bigger than this. Neither can it get more tragic. Even as drought and food scarcity loom large, India’s granary, Punjab, is losing a staggering 18 lakh tonnes of wheat to wastage. It’s a quantity that can feed 15 lakh families for 365 days, or the weight of entire wheat produced in Australia in a year.
Mountains of wheat are rotting in the fields of Punjab, strewn across soggy land, with government agencies either unable or unwilling to move it out of the state into the mouths of the country’s hungry millions.
In Khamanu, about 50 km from Chandigarh, rows of wheat bags are piled carelessly, telling a sorry tale of neglect and callousness. “There are lakhs of bags, each weighing 50 kg, which went bad as it remained out in the open for months and years together,” said Gurmeet Singh, a farmer. “I haven’t seen anyone covering it for two years now.”
In Punjab, which produces a total of over 150 lakh mt of wheat, a whopping 99.92 lakh mt is stored in the open while only 30 lakh mt is covered. Agriculturists have cried themselves hoarse at the lack of government infrastructure in the country’s food basket.
“Moisture is wheat’s worst enemy, both in terms of quality and value,” said P S Rangi, an expert from Punjab Agriculture University and consultant with North-India Farmers Commission. “That’s why most of the wheat we produce is exported to other countries and is used as cattle feed. Rains seeping into uncovered gunny bags make it unfit for human consumption. About 12% of the total wheat produced gets wasted due to poor and inadequate storage,” Rangi said.
A S Chabra, deputy general manager, FCI, Punjab region, says some moisture is permitted. “The quality of wheat remains unaffected till about 14% of moisture. And attempt is made to move the wheat out of the state at the earliest,” he said, even as 30 lakh more mt of grain from last year waits to be loaded into trucks.
Government official Daljit Singh Bhatia, the district food and supply controller, Ropar, pleads helplessness saying the state doesn’t have the infrastructure. “One needs wooden racks to keep the water out to ensure that the wheat stays dry,” he said.
But farmers like Bhupinder Singh aren’t convinced. “It kills me to see so much of food go waste,” the 72-year-old said. “I took a loan of Rs 2 lakh to take care of my field this year and my family sweats it off to produce wheat. It’s very sad to see it going to the insects,” he added, pointing at wheat grain, bereft of any cover and infested with worms. “There are rats everywhere, as fat as rabbits. They eat it even as our countrymen go hungry,” he said.
DIGEST THIS
Mountains of wheat are rotting in the fields of Punjab, strewn across soggy land
Government agencies are either unable or unwilling to move it out of the state into the mouths of the hungry millions

Source:
http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOIBG/2009/08/21&PageLabel=11&EntityId=Ar01100&ViewMode=HTML&GZ=T

Thursday, August 20, 2009

உலகின் இளம் வயது விங் வாக்கர்






இங்கிலாந்து நாட்டை சேர்ந்த டைகர் ப்ரேவேர் என்ற 8 வயது சிறுவன் உலகத்தின் இளம் வயது விங் வாக்கர் என்ற சாதனையை படைத்திருக்கிறான். அந்த விமானம் லண்டனிலிருந்து கிளம்பி க்லௌசெஸ்டரில் உள்ள ரெட்காம்ப் விமான தளத்தின் மேல் 1000 அடி உயரத்தில் 160 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்தது. அந்த விமானம் அவனுடைய 62 வயது தாத்தாவால் இயக்கப்பட்டது. இதன் மூலம் டைகர் ப்ரேவேர், 2001 ல் 11 வயது கய் மாசன் ஏற்படுத்திய உலக சாதனையை முறியடித்தான்.

காணொளி


BBC காணொளி
http://news.bbc.co.uk/2/hi/uk_news/8210351.stm

Wednesday, August 19, 2009

குதிரையின் மீது மோதிய பந்தயக் கார் - விபத்து



அர்ஜென்டினா கார் பந்தய போட்டியில் வேகமாக வந்த கார் ஒரு குதிரை மீது மோதியது. மோதிய வேகத்தில் குதிரை 30 அடி உயரம் வரை தூக்கி எறியப்பட்டு பூமியின் மேல் மோதியது. இரண்டு குதிரைகள் மயிரிழையில் விபத்திலிருந்து தப்பித்தன.

Horse Power:
அதிக குதிரை சக்தியில் வந்த கார், குதிரையின் மீதே மோதிவிட்டது.

காணொளி

Monday, August 17, 2009

கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் தந்தையார் பெயர் என்ன? - பள்ளியில் நடந்த நகைச்சுவை சம்பவம்



நான் ஏழாம் வகுப்பு படித்த போது, ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு பயிற்சிக்காக ஒரு ஆசிரியை எங்கள் பள்ளியில் சேர்ந்திருந்தார்.எங்கள் வகுப்பிற்கு தமிழ் பாடம் எடுக்க வந்தார். முதல் நாள் கவிக்குயில் சரோஜினி நாயுடுவை பற்றிய பாடம் நடத்தினார். கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் தந்தையார் பெயர் அகோரனாத் சட்டோ பாத்தியாயா என்பதாகும்.

எங்கள் வகுப்பில் சரவணன் என்று ஒரு மாணவன் இருந்தான். அவன் மற்ற மாணவர்களை விட மிகவும் ஒல்லியாக இருப்பான். வேகமாக காற்று வீசினால் பறந்து விடுவான். அந்த அளவிற்கு ஒல்லியாக இ்ருப்பான்.

ஆசிரியை மறுநாள் வகுப்பிற்கு வந்து முதல் நாள் நடத்திய பாடத்திலிருந்து சில கேள்விகளை கேட்டார். அப்பொழுது சரவணனை எழுப்பி கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் தந்தையார் பெயர் என்ன? என்று கேட்டார். எங்கே தவறாக பதில் சொன்னால் ஆசிரியை பிரம்பால் அடித்து விடுவாரோ என்று நடுங்கி கொண்டே எழுந்தான். ஆசிரியை திரும்பவும் கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் தந்தையார் பெயர் என்ன? என்று கேட்டார். அவன் உடனே அகோரனாத் சட்டைய பாத்தியாய்யா என்று பதிலளித்தான். உடனே வகுப்பறை சிரிப்பில் அதிர்ந்தது.

சரோஜினி நாயுடு பற்றிய தகவல்களை கீழ்க்கண்ட சுட்டிகளில் சென்று தெரிந்து கொள்ளவும்.
http://en.wikipedia.org/wiki/Sarojini_Naidu
http://ta.wikipedia.org/wiki/சரோஜினி_நாயுடு
http://www.tamilish.com/தலைசிறந்த_பெண்கள்_-_சரோஜினி_நாயுடு/

கம்ப்யூட்டரை டைப்ரைட்டர் போல் பயன்படுத்தும் பெண்மணி - நகைச்சுவை

ஒரு பெண்மணி கம்ப்யூட்டரை டைப்ரைட்டர் போல் பயன்படுத்துகிறார். யுடியூபில் சமீபத்தில் பார்த்த வீடியோவை இங்கு இணைத்துள்ளேன்.


Saturday, August 15, 2009

தினமலர் வாரமலர் - அந்துமணி பா.கே.ப. வில் படித்த நகைச்சுவை

ரயில் ஏறிய ஒரு விருந்தாளி, வழியனுப்ப வந்தவரிடம் குறைபட்டுக் கொண்டார்... "நான் ரயிலுக்கு டிக்கட் ரிசர்வ் பண்ணப் போனேன்... அப்போதே சொல்லியிருக்கலாம்... திரும்பி வந்து டிரஸ்சை எல்லாம் பெட்டியில் அடுக்கினேன்... அப்போது சொல்லியிருக்கலாம்... நீங்க சொல்லலே... அப்புறம் குளித்து, டிரஸ் பண்ணி கிளம்பினேன்... அப்போதும் சொல்லலே... பேசாம இருந்துட்டீங்க... அப்புறம், ஸ்டேஷனுக்கு வர, ஆட்டோ பிடிக்கப் போனேன்... அப் போதும், "கம்'முன்னு இருந்தீங்க: வாயே தொறக்கலே... அப்புறம், உங்க குடும்பத்திலே எல்லார் கிட்டேயும்,"போய்ட்டு வரேன்'ன்னு சொல்லிட்டு புறப்பட்டேன்... அப்போவும் சொல்லாம, பேசாம இருந்தீங்க... இப்போ... நான் ரயில்லே ஏறி உட்கார்ந்து, கார்டு விசில் ஊதி, பச்சைக் கொடியும் காட்டி, வண்டியும், "மூவ்' ஆயிட்டு. இப்போ போயி, "இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போகலாம்...'ன்னு சொல்றீங்களே... இது உங்களுக்கே நல்லாயிருக்கா...'


இதை படித்ததும் திருமண மண்டபத்தில் நடந்த சுவையான சம்பவம் நினைவுக்கு வந்தது.

நானும் , என் நண்பனும் திருமண வீட்டிற்கு சென்றிருந்தோம். உணவு கூடத்தில் பரிமாற ஆட்கள் தேவைப்பட்டதால் நாங்கள் சென்று உதவி செய்தோம். என் நண்பன் இயல்பிலேயே ஒரு குறும்புக்காரன். நான் இட்லி பரிமாறிக் கொண்டிருந்தேன். என் நண்பன் சாம்பார் ஊற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தான். ஒரு பெண் சாப்பிட்டு முடிக்கும் தருவில் இருந்தாள். அவளது இலையில் இரண்டு மூன்று இட்லி துண்டுகள் எஞ்சி இருந்தன. அந்த பெண் என் நண்பனிடம் சாம்பார் ஊருமாறு கூறினாள்.

அவனும் சென்று கரண்டி நிறைய சாம்பார் எடுத்தான். அதை ஊற்றப் போகும் முன்பு அந்த பெண் போதும் போதும் என்றாள்.அவனும் சாம்பார் ஊற்றாமலாயே சாம்பார் வாளியை தூக்கி கொண்டு வேறு வரிசைக்கு சென்று விட்டான்.

இதை வந்து அவன் எங்களிடம் கூறவும் அன்று முழுவதும் ஒரே சிரிப்புத்தான் ...

Friday, August 14, 2009

சுதந்திர தினம் - பள்ளி மலரும் நினைவுகள் .....

அனைவருக்கும் இந்திய திருநாட்டின் 62 வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.



சுதந்திர தினம் - பள்ளி மலரும் நினைவுகள் .....

பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் எவ்வாறு சுதந்திர தினம் கொண்டாடினோம் என்பதை இங்கே நினைத்து பார்க்கிறேன்.

ஒத்திகை
சுதந்திர தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே குழுவாக பாடுவதற்கான ஒத்திகையை ஆரம்பித்து விடுவார்கள். ஏனென்றால் சிறப்பு விருந்தினர் முன்னிலையில் அபஸ்வரமாக பாடிவிடக் கூடாது அல்லவா!...

காலை வேளையை தவிர மாலையிலும் பிரேயர் நடக்கும். தமிழ் தாய் வாழ்த்து, கொடிப் பாடல், தேசிய கீதம் அனைத்தையும் சரியாக பாடினால் மட்டுமே பிரேயர் முடியும் . இல்லை என்றால் தலைமை ஆசிரியர் திருப்தி அடையும் வரை திரும்ப திரும்ப பாடிக் கொண்டே இருக்க வேண்டும்.

அனைவரும் ஒரே சீராக பாட வேண்டும். ஆனால் சில சமயம் முன் வரிசையில் உள்ளோர் வேகமாகவும் , பின் வரிசையில் நிற்பவர்கள் மெதுவாகவும் பாடுவார்கள். இல்லை என்றால் ஆண்கள் வேகமாகவும், பெண்கள் மெதுவாகவும் பாடுவார்கள். இந்த குறைகளை எல்லாம் சரி செய்து அனைவரையும் ஒழுங்காக பாட வைப்பார்கள். தமிழ் தாய் வாழ்த்து பாடியவுடன் தலைமை ஆசிரியர் கொடி ஏற்றி , சரியாக கொடி ஏற்ற முடிகிறதா , கொடி சரியாக பறக்கிறதா என்று சோதித்துக் கொள்வார். சில நாட்களில், காற்று வீசாமல் கொடி சுருண்டுகொள்ளும். நாங்கள் சுதந்திர தினம் அன்று கொடி நன்றாக பறக்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொள்வோம் .

சுதந்திர தினத்தன்று .....

தமிழ் தாய் வாழ்த்து பாடியவுடன் பள்ளி தலைவன் உறுதிமொழி சொல்ல அனைவரும் பின்தொடர்ந்து உறுதிமொழி சொல்வார்கள். உறுதிமொழி சொல்லும் போது அனைவரும் வலது கையை 45 டிகிரி கோணத்தில் நீட்டி நெஞ்சுக்கு நேரே மடக்கி உறுதிமொழி சொல்வோம்.

பின்னர் பள்ளி தலைவன் இராணுவ நடை நடந்து சிறப்பு விருந்தினருக்கு வணக்கம் செலுத்தி அவரைக் தேசியக்கொடியை ஏற்றுமாறு கேட்டுக் கொள்வான். அப்போது தேசியக்கொடியில் கட்டி வைக்கப்படிருந்த மலர்கள் யாவும் சிறப்பு விருந்தினர் மேலும் , அருகிலுள்ளோர் மேலும் விழும். பின்னர் கொடிக்கு வணக்கம் செலுத்தி விட்டு கொடிப் பாடல் பாடுவோம்.

பின்னர் சிறப்பு விருந்தினர் சுதந்திர தினத்தின் சிறப்புகளை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்து வந்திருக்கும் தியாகிகளுக்கு சிறப்பு செய்வார். பின்னர் பள்ளியிலிருந்து ஒரு மாணவன் சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி சொற்பொழிவாற்றுவான் . கடைசியாக தேசிய கீதத்தை பாடியவுடன் விழா இனிதே நிறைவுறும்.

குறிப்பு:
இதனிடையே சில மாணவ மாணவிகள் காலையில் வீட்டில் ஒன்றும் சாப்பிடாமல் வந்து இருப்பார்கள். காலை வெயிலில் நீண்ட நேரம் நிற்கும் போது
மயக்கம் போட்டு கீழே விழுந்து விடுவார்கள். அவர்களை தனியே ஓரமாக உட்கார வைத்து சூடாக தேநீர் வாங்கி தருவார்கள். பின்னர் விழா முடிந்ததும் ஆசிரியர்கள் வழங்கும் இனிப்புகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்று சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் பார்ப்போம்.







கொடிப் பாடல்
தாயின் மணிக்கொடி
பாரீர்...... அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் அதன்
உச்சியின் மேல் மூவர்ணங்களோடு......





Thursday, August 13, 2009

சர்தார்ஜி ஜோக் : எப்போதோ படித்தது


சர்தார்ஜியும் அவருடைய மனைவியும் ஆட்டோவில் பயணம் செய்கிறார்கள். ஆட்டோ ஓட்டுனர் சர்தார்ஜியின் மனைவியை கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டே ஆட்டோ ஓட்டுகிறார்.

இதை சர்தார்ஜி பார்த்து விடுகிறார். உடனே சர்தார் கோபத்துடன் என்ன சொன்னார் தெரியுமா ?
.
.
.
.
.
.
.
.
.
.
யோவ் நீ பின்னாடி வந்து உட்காரு, நான் ஆட்டோவை ஓட்டுறேன்!!!!!

Wednesday, August 12, 2009

'புவன்' எர்த் 3டி மேப் : இஸ்ரோ தொடங்கியது


கூகிள் எர்த்-ன் ஒரு பகுதியாக 'புவன்' என்ற பெயரில் இந்தியாவின் எந்தவொரு சிறு பகுதியையும் கணினியில் அமர்ந்து கொண்டே தெளிவாகப் பார்க்கக்கூடிய வகையிலான முப்பரிமாண (3D) வரைபடத்தை உள்ளடக்கிய இணைய தளத்தை இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் - இஸ்ரோ தொடங்கியுள்ளது.

இந்த இணைய தளம் மூலம் செயற்கைக்கோளில் இருந்து சம்பந்தப்பட்ட பகுதியின் வரைபடத்தை கண்டுணர முடியும்.

இதற்கான இணையதளமான http://bhuvan.nrsc.gov.in -ன் பீட்டா வடிவத்தை பிரதமர் அலுவலக இணையமைச்சர் பிரிதிவிராஜ் சவான் இன்று புதுடெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் தொடங்கி வைத்தார்.

இந்திய வானவியல் சங்கம் சார்பில், 21ஆம் நூற்றாண்டில் இந்திய விண்வெளித் துறை எதிர்கொள்ளும் சவால் என்ற தலைப்பில் கருத்தரங்கும் நடைபெற்றது.

ராணுவப் பகுதி மற்றும் அணு சக்தி நிலையம் நீங்கலாக இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் இந்த இணைய தளம் மூலம் துல்லியமாக காணலாம் என்று இஸ்ரோ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நன்றி : வெப்துனியா
Source : http://tamil.webdunia.com/newsworld/news/national/0908/12/1090812088_1.htm

News From தேட்ஸ் தமிழ்
Source : http://thatstamil.oneindia.in/news/2009/08/13/india-isro-launches-desi-version-of-google-earth.html

மும்பை: கூகுள் எர்த் போன்ற இணையதளம் ஒன்றை இஸ்ரோ தொடங்கியுள்ளது. இதற்கு புவன் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என போற்றப்படும் விக்ரம் சாராபாயின் 90வது பிறந்த நாளையொட்டி இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள இந்திய வானியல் கழகத்தில் நடந்த புவன் தொடக்க விழாவில் நாட்டின் முன்னணி விண்வெளி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த தேசிய ரிமோட் சென்சிங் ஏஜென்சி இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளது.

ஏஜென்சியின் இயக்குநர் வி.ஜெயராமன் கூறுகையில், 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தத் திட்டத்திற்காக, இஸ்ரோவிலிருந்து இளம் விஞ்ஞானிகள் சிலர் தேர்வு செய்யப்பட்டனர். இந்தப் பணியின் தொடக்கம் முதல் முடிவு வரை அயராமல் பாடுபட்ட அந்தக் குழு தற்போது வெற்றிகரமாக புவனை உருவாக்கியுள்ளது.

இந்திய செயற்கைக்கோளான ரிசோர்ஸ்சாட்-1 போன்றவற்றிலிருந்து கிடைத்த டேட்டாக்களைப் பயன்படுத்தி புவன் உருவாக்கப்பட்டுள்ளது. புவன் என்றால் சமஸ்கிருத மொழியில் பூமி என்று பொருள்.

இந்த இணையதளத்தில், பூமியில் எங்கு ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்பது உள்பட பல்வேறு தகவல்கள் அடங்கியுள்ளது. இந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ள தகவல்களுக்கு மத்திய அரசின் ஒப்புதல் உள்ளது. அதேசமயம், பொது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தகவல்களை பகிரங்கமாக வெளியிடாமல் காப்போம் என்றார்.

இஸ்ரோ தலைமை செய்தித் தொடர்பாளர் சதீஷ் கூறுகையில், கூகுள் எர்த்துடன் ஒப்பிடுகையில், புவன் சிறப்பானது. இந்திய நகரங்கள் குறித்த அனைத்துத் தகவல்களையும் இது தரும். பயன்பாட்டாளர்களுக்கு இந்த தளம் மிகவும் சவுகரியமானதாக இருக்கும் என்றார்.

கூகுள் எர்த் தளத்தில், 200 மீட்டர் வரைக்கும்தான் 'ஜூம்' செய்ய முடியும். அதேசமயம், புவனில் 10 மீட்டர் வரை செல்ல முடியும் என்று இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புவன் சாப்ட்வேரை http://bhuvan.nrsc.gov.in/ இணையத் தளத்தில் டெளன்லோட் செய்யலாம்.

ஆனால், இஸ்ரோவின் இந்தத் தளத்திலிருந்து புவனை டெளன்லோட் செய்வதற்கு உங்களுக்கு ரொம்பப் பொறுமை வேண்டும். அதிவேக பிராண்ட் பேண்ட் லைனிலேயே இதை டெளன்லோட் செய்ய அரை மணி நேரத்துக்கும் மேலாகிறது. இடையில் சர்வர் 'உட்கார்ந்துவிட்டால்' இன்னும் அரை மணி நேரமும் ஆகும்.

இன்று பகல் முழுவதும் இந்த இணையத் தளம் ஓபன் ஆகவே இல்லை. அதைவிடக் கொடுமை இந்த புவன் குறித்து இஸ்ரோ இணையத் தளத்தில் எந்தத் தகவலும் இல்லை என்பது தான்.

இஸ்ரோவும் அரசு நிறுவனமாச்சே!.

நன்றி : தேட்ஸ் தமிழ்

Monday, August 10, 2009

இளவரசியின் மறு பிறவியா ஜாக்சன்?




எகிப்து நாட்டு இளவரசியின் மறு பிறவிதான் மைக்கேல் ஜாக்சன் என்று ஒரு செய்தி கிளம்பியதால் புதுப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜாக்சன் உயிருடன் இருந்தபோதும் அவரைப் பற்றியும், அவரைச் சுற்றியும் ஏகப்பட்ட சர்ச்சைகள், செய்திகள். இறந்த பின்னரும் கூட அது ஓயவில்லை. தினசரி ஒரு புதுப் புது செய்தி ஜாக்சன் குறித்து வந்தவண்ணம் உள்ளது.

இந்த நிலையில் ஜாக்சன், எகிப்து நாட்டு இளவரசியின் மறு பிறவி என்று ஒரு புதுச் செய்தி கிளம்பவே அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள அருங்காட்சியகத்தி்ல ஒரு எகிப்து நாட்டு இளவரசியின் புராதன சிலை உள்ளது. இந்த சிலையைப் பார்த்தவர்கள் அப்படியே நின்று போய் விட்டனர். காரணம், இந்த சிலை அப்படியே அச்சு அசல், ஜாக்சனைப் போலவே இருப்பதால்.

இதையடுத்து எகிப்து இளவரசியின் மறு பிறவிதான் ஜாக்சன் என்று அவரது ரசிகர்கள் செய்தி கிளப்பி வருகின்றனர். மேலும், அந்த அருங்காட்சியகத்திற்கும் ரசிகர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். சிலையைப் பார்க்கும் அவர்கள், நிச்சயம் ஜாக்சன் இந்த இளவரசியின் மறு பிறவிதான் என்று அடித்துக் கூறுகின்றனர்.

இதுகுறித்து அருங்காட்சியகத்தின் பிரதிநிதி ஒருவர் கூறுகையில், ஜாக்சன் இந்த மியூசியத்திற்கு வந்திருப்பாரா என்று தெரியவில்லை. ஆனால் இந்த சுண்ணாம்புக் கல் பெண்ணின் சிலை அப்படியே ஜாக்சன் போல்தான் உள்ளது. இது 3000 ஆண்டுகள் பழமையான சிலையாகும் என்றார்.

நன்றி : thatstamil
Source : http://thatstamil.oneindia.in/movies/hollywood/2009/08/10-michael-jackson-egyptian-princess-reincarnate.html

Friday, August 7, 2009

நேரமும் தேதியும் - கணித விந்தை 1 2 3 4 5 6 7 8 9

இன்று (07-August-2009) மதியம் 12 மணி 34 நிமிடம் 56 நொடிகளில் நேரமும் தேதியும் இப்படி இருக்கும்
12:34:56 07/08/09
1 2 3 4 5 6 7 8 9

Thursday, August 6, 2009

மீண்டும் ஜீனோ - சுஜாதா - MEENDUM JEENO



முதல் பாகமான என் இனிய இயந்திராவில் சர்வாதிகாரி ஜீவா ஆளும் நாட்டின் தேச பக்தி கீதத்தை பற்றி இவ்வாறு குறிப்பிட்டு இருப்பார்.

தந்தையின் மணிக்கொடி
பாரீர்..... அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் அதன்
உச்சியின் மேல் ஜீவா வாழ்கவேன்றே.....

பள்ளியில் நாம் பாடிய அசல் தேசியக் கோடி பாடல் இதோ

தாயின் மணிக்கொடி
பாரீர்...... அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் அதன்
உச்சியின் மேல் மூவர்ணங்களோடு......

மீண்டும் ஜீனோ நாவலைப் பற்றி சுஜாதா அவர்களின் கருத்து :
இந்தக் கதையில் ஜீனோ என்ற இயந்திர நாய் மனித சமுதாயம் சுபிட்சமடைய ராணி நிலாவுக்கு உதவுகிறது. அதற்காக அது செய்யும் சாகசங்கள் மிக அற்புதம்.

மனிதர்களைவிட இயந்திரங்கள் உண்மையாய்ப் பாசாங்கு செய்யாமல் இந்த தேசத்தைக் காக்க முடியும். ஆள்வோர் தன் கடமைகளைச் சரியாகச் செய்யாமல் சுயநல வேட்கை கொண்டு நாட்டை வேட்டைக் காடாக்கி வரும் இந்த நாளில்...? அதற்கு மாற்று என்ன? இப்படி யோசித்ததின் பலனே இந்தப் புதிய சிந்தனை.

மீண்டும் ஜீனோ சுஜாதா - MEENDUM JEENO
இந்த நாவலை இணையத்தில் படிக்க அல்லது தரவிறக்கம் செய்து படிக்க கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கவும்.
http://www.scribd.com/doc/6365090/-Meendum-Jeeno-sujatha

Wednesday, August 5, 2009

நாடாளுமன்றத்தில் நந்தன் நில்கேனியின் முதல் நாள்

Nandan's brief of his first day in parliament! - VeryInteresting
நாடாளுமன்றத்தில் நந்தன் நில்கேனியின் முதல் நாள்



முன்னால் இன்போசிஸ் தலைவரும் தற்போதைய அரசியல்வாதியுமான நந்தன் நில்கேனியின் முதல் நாள் நாடாளுமன்ற அனுபவங்கள் - ஆங்கில மின்னஞ்சலின் தமிழாக்கம் இதோ உங்களுக்காக.

நாடாளுமன்றம் குண்டூசி விழுந்தால் கூட கேட்குமளவு அமைதியாயிருந்தது. நான் முழு உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் இருந்தேன்!!!! என்னுடைய அறிமுகம் இன்றைய கூட்டத் தொடரின் ஒரு முக்கிய அம்சம் என்று மாண்பு மிகு பாரதப் பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்கள் முன்கூட்டியே தெரிவித்து இருந்தார். என்னுடைய முதல்
நாடாளுமன்ற உரையை நன்றாக வழங்க முடியும் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். பல பேட்டிகளுக்கும் சந்திப்புகளுக்கும் பிறகு நான் உணர்ச்சி வசப்பட்டவனாய் இருந்தேன். சபாநாயகர் அவையை தொடங்கி வைத்த பின், பிரதமர் என்னை அவைக்கு அறிமுகம் செய்து வைத்தார். நான் இந்திய நாட்டின் குடிமக்கள் அடையாள அட்டை வழங்கும் அமைப்பின் தலைவர் என்றும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மின்னணு அடையாள அட்டை வழங்கும் பொறுப்பினை வகிக்கிறேன் என்றும் குறிப்பிட்டார். மேலும் அவர் நான் இந்த திட்டத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்பதையும், இன்போசிஸ்-ல் நான் செயல்படுத்திய பல்வேறு ப்ரோஜெக்ட்களை பற்றயும் குறிப்பிட்டார். அவையோர் இந்த தகவல்கள் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்தனர். நான் சில வார்த்தைகள் பேசும்படி கேட்டுக்கொள்ளப்பட்டேன். நான் இந்திய அரசாங்கத்திற்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டு , இந்த ப்ரொஜெக்டை வெற்றிகரமாக முடித்து கொடுப்பதாக உறுதி அளித்தேன். சபா நாயகர் என்னை அவையில் இணைத்துக் கொண்டார். அவையின் செயல்பாடுகள் தொடங்குவதற்கு முன்பாக அவையின் ஒரு பக்கத்தில் இருந்து சிறிது சத்தம் கேட்டது.

அந்த சத்தம் ஜவுளித் துறை அமைச்சரிடம் இருந்து வந்தது. நான் கோட் சூட் போன்ற உடைகளை தவிர்த்து எளிமையான ஆடைகளை அனிந்து வர வேண்டும் என்று குறிப்பிட்டார். நான் பதில் அளிப்பதற்காக எழுந்து நின்றேன். என்னுடைய வருத்தங்களை தெரிவித்துக் கொண்டு அடுத்த முறையிலிருந்து அனைவரும் ஏற்றுக் கொள்ள கூடிய எளிய ஆடைகளை அணித்து வருவதாகாக குறிப்பிட்டேன். ஜவுளித் துறை அமைச்சர் கூறியது சரி என்று நினைக்கிறேன். நாங்கள் இன்போசிசிலும் கார்ப்பரேட் உடை விதிகளை பின்பற்றினோம். நாடாளுமன்றத்திலும் அது போன்ற உடை விதிகள் உள்ளன போலும்.


நான் அமர்ந்த பொழுது யாரோ என்னை அழைப்பது போல் உணர்ந்தேன். அது யார் என்று பார்த்த பொழுது ஆச்சர்யமடைந்தேன். அது முன்னால் இந்திய கிரிக்கெட் அணித் தலைவரும் எனக்கு பிடித்த மட்டை வீச்சாளருமான மொஹமத் அசாருதீன். அவர் சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்றது நினைவுக்கு வந்தது. அவரை பார்த்து புன்னகைத்து அவருடைய விளையாட்டை மிகவும் ரசித்தாகக் கூறி கை குலுக்கினேன். தன்னுடைய குர்தா ஆடைகளை வடிவமைத்த இத்தாலிய ஆடை வடிவமைப்பாளருடன் எனக்கு நேரம் ஒதுக்கி தருவதாக கூறினார். மிலனிலுள்ள இத்தாலிய ஆடை வடிவமைப்பாளர் இந்திய குர்தா ஆடைகளை வடிவமைக்கிறார்!!!!! பிரைட்மேன் எழுதி வரும் அடுத்த புத்தகத்தின் பெயர் உலகச் சந்தைகள் தட்டையாகிவிட்டன. அந்த புத்தக ஆசிரியரிடம் இந்த எடுத்துகாட்டை கொடுக்க வேண்டும் என்று குறித்துக் கொண்டேன். அந்த ஆடை வடிவமைப்பாளரின் விபரங்களை தருமாறும் பின்னர் தான் இது குறித்து தெரிவிப்பதாகவும் அசாரிடம் கூறினேன். பின்னர் அவையில் பல்வேறு புதிய தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டன. நான் என்னுடைய ப்ரொஜெக்டின் முறை வரும் வரை வெறும் பார்வையாளனாக அமர்ந்திருந்தேன். மதிய உணவு
இடைவேளைக்கு பிறகு என்னுடைய ப்ரொஜெக்டின் முறை வந்தது!!!!!


என்னுடைய மடிக்கணியில் போதிய அளவு மின்சாரம் இல்லை. நான் மன்மோகன் அவர்களிடம் இதைப் பற்றி தெரிவித்தேன். எனக்கு வேர்த்து கொட்டியது. இதை பற்றி கவலை பட வேண்டாம் என்று அவர் அமைதியாக பதிலளித்தார். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை!!!!! சபாநாயகர் மின்னணு அடையாள அட்டை வழங்கும் ப்ரோஜெக்டிற்கான என்னுடைய திட்டங்களை பற்றி விளக்குமாறு கேட்டுக்கொண்டார். என்னுடைய திட்டம் 30-60-90-120 நாட்கள் மைல் கல் சாதனைகளை உள்ளடக்கியது. இதை பற்றி விளக்குவதற்கு மின்சார இணைப்பு,ப்ரொஜெக்டர் மற்றும் திரை ஆகியவை வேண்டும் என்று கேட்டேன். இதற்கடுத்து என்ன நிகழப் போகிறது என்று எனக்கு ஒரு யோசனையும் இல்லை.

அடுத்த இரண்டு நிமிடங்கள் எனக்கு மிகவும் வன்முறையாக கடந்தது.நான் மிகவும் கவலைப்பட்டேன். என்னுடைய கோரிக்கை உகந்ததா என தீர்மானிக்க ஒரு மூத்த காபினெட் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. மின்சாரம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்பு துறை அதிகாரிகள் என்னுடைய கோரிக்கையை மிகவும் கவனமாக ஆய்வு செய்து அதில் ஏதேனும் தேசிய பாதுகாப்புக்கு குறைபாடுகள் உள்ளனவா என்று ஒரு அறிக்கையை தயாரிப்பார்கள். இது ஏனென்றால் மின்சார இணைப்பு மின்துறையின் கீழும் , மடிகணினி தகவல் தொழில்நுட்பதுறையின் கீழும் , ப்ரொஜெக்டர் ஒளிபரப்பு துறையின் கீழும் வருகின்றன. என்னுடைய திட்டங்களை 30-60-90-120 நாட்கள் என்றில்லாமல் 2-4-6 என்று வருடக் கணக்கில் மாற்றி கொள்ள என்றும் அறிவுறுத்தப்பட்டேன். அவர்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம். இந்த விசயத்தில் என்னுடைய கணிப்பு தவறாக இருந்திருக்கலாம்.

கடைசியில் இந்த விசயத்தில் அவர்கள் சொன்னது என்னவென்றால்,நான் முழுமையான, சுதந்திரமான, அனைத்தையும் உள்ளடக்கிய, ஐந்து வருடங்களுக்கு மேல் செயல்படுத்தக்கூடிய நீண்ட கால திட்டத்துடன் வர வேண்டும். என்னுடைய ப்ரொஜெக்டை பற்றி விளக்கமளிக்க எனக்கு மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டுமொரு வாய்ப்பு வழங்கப்படும் (இதற்குள்ளாக மடிக்கணினி மின்சார இணைப்பு தொடர்பான பிரச்சினைகள் சரி செய்யப்பட்டுவிடும்) . நான் பல்வேறு குழம்பிய உணர்வுகளால் நிரம்பி இருந்தேன். நான் ஒரு உடனடி தீர்விற்கு திட்டமிட்டால் நிர்வாகம் நீண்ட கால தீர்வை விரும்புகிறது.
நான் நாடாளுமன்றத்தை விட்டு வெளியே வந்து திரு.மூர்த்தி அவர்களுக்கு ஒரு குறுந்தகவலை அனுப்பினேன். நீங்கள் நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள் ஆனால் இங்குள்ளவர்களும் நம்மைப்போல் தான் வேலை செய்கிறார்கள். அடுத்த மூன்று மாதங்களுக்கு நான் தேசிய நாற்காலியில் (NATIONAL BENCH) அமர்த்தபட்டிருகிறேன். நான் இப்பொழுது ஒரு வேலை இல்லாத பெரியவன் (VIP).

இந்த மின்னஞ்சலை ஆங்கிலத்தில் படிக்க இங்கே சொடுக்கவும்
http://funnyelectronicmails.blogspot.com/2009/07/nandans-brief-of-his-first-day-in.html

Disclaimer: I have got this on my email. so cant comment on authenticity of this blog. It may be a joke floating around on net. So just read and enjoy.