சென்னை: நோக்கியா நிறுவனத்தில் +2 படித்த பெண்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, நோக்கியா நிறுவனத்திற்கு 1000 பெண்களை ஆப்ரேட்டர் டிரெய்னியாக தேர்வு செய்யும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாமினை காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7.11.2009 (சனிக்கிழமை) காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடத்த உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. மாத ஊதியம் ரூ.4400/- மற்றும் இலவச உணவுடன் ரூ.1000/-ற்கான உணவுப்படி, இலவச மருத்துவ வசதி, 60 கி.மீ சுற்றளவிற்கு இலவச போக்குவரத்தும் அளிக்கப்படும். +2 ல் 60 சதவீத மதிப்பெண் பெற்ற 18 முதல் 23 வயதிற்குட்பட்ட பெண்கள் தங்கள் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை அன்றே வழங்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
நன்றி : தினமலர்
URL : http://www.dinamalar.com/latest_news.asp#26694
Monday, November 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நல்ல தகவல்.
Post a Comment