Monday, November 16, 2009

பெங்களூரு சென்னை இடையே தூங்கும் வசதி கொண்ட பஸ்கள்

**********************************************************
தினமலர் செய்தி:
பெங்களூரு - சென்னை இடையே, தூங்கும் வசதி கொண்டு 'ஏசி' பஸ்களை இயக்க, கர்நாடக போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், தூங்கும் வசதி கொண்ட 'ஏசி' பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது. இதற்காக, மகாராஷ்ட்ர மாநிலம் புனேயில் உள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து எட்டு பஸ்கள் வாங்கப்படுகின்றன. ஒவ்வொரு பஸ்சும், 44.50 லட்சம் ரூபாய் மதிப் பில் தயாரிக்கப்படுகிறது. 12 மீட்டர் நீளமுள்ள இப் பஸ்சில், 32 பயணிகள் வசதியாக தூங்க முடியும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகிறது. இதில் முதல் கட்டமாக, இரு பஸ்கள் பெங்க ளூருய - சென்னை இடையே இன்டர்சிட்டி சேவையாக இயக்கப்பட உள்ளது. 'அம்பாரி' என்ற பெயரில் இயக்கப்பட உள்ள இப் பஸ்களில், ஓட்டுனருக்கு சிறப்பு இருக்கைகள், பயணிகள் வசதியாக இயற் கைக் காட்சிகளை காண வசதி, பயணிகளின் பொருட்களை வைக்க வசதியான இடம் என, பல்வேறு சிறப்பம்சங் களை கொண்டு அமைக்கப்படுகிறது. இவ்வகை பஸ்கள், இரண்டாம் கட்டமாக அதிக வருவாய் ஈட்டக் கூடிய பிற மாநில பகுதிகளுக்கும் இயக்கப்படும்.
**********************************************************

ஆனால் தமிழ்நாடு அரசுப் பேருந்துகளை பார்த்தல்

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ

என்ற பாரதியாரின் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.

1 comment:

Jackiesekar said...

உங்க ஆதங்கத்தை என்னால் உணரமுடியுது...