Tuesday, November 24, 2009

பிரணவ் மிஸ்ட்ரியின் கண்டுபிடிப்பான ஆறாவது அறிவு கருவி - அனைவரும் காண வேண்டிய காணொளி

பிரணவ் மிஸ்ட்ரியின் கண்டுபிடிப்பான ஆறாவது அறிவு கருவியை பற்றி ஒரு ஆழமான பார்வை.

இவருடைய கண்டுபிடிப்பின் மூலம் நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்களை தகவல் தொழில்நுட்ப சாதனங்களுடன் பயன்படுத்த இயலும். உதாரணமாக காகிதத்தையே மடிக்கணினியாக பயன்படுத்தலாம். டிஜிட்டல் காமெராவை வெளியே எடுக்காமல் நமது கைகளை கொண்டே படம் எடுத்து, படங்களை டிஜிட்டல் காமெராவில் சேமிக்கலாம். மேலும் இது தொடர்பான பல கண்டுபிடிப்புகளை இந்த காணொளியில் அவர் விளக்கியுள்ளார்.



இந்த காணொளியை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

Pranav Mistry
http://www.pranavmistry.com/
http://www.linkedin.com/in/pranavmistry
http://www.media.mit.edu/people/pranav


ஆறாவது அறிவு கருவி கண்டுபிடிப்பு தொடர்பான தகவல்களை open source முறையில் வெளியிடப் போவதாக பிரணவ் மிஸ்ட்ரி கூறினார். இந்த தகவல்களை பலரும் படித்து, இதனை அடிப்படையாக கொண்டு பலரும் தங்கள் சிந்தனைகளை செயல் வடிவமாக மாற்ற முடியும். பிரணவ் மிஸ்ட்ரிக்கு வாழ்த்துக்கள்.

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்! இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம்!

நன்றி : http://economictimes.indiatimes.com/tv/TED-India-Pranav-Mistry/videoshow_ted/5231080.cms

3 comments:

vasu balaji said...

இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் காலத்திற்கு காத்திருப்போம்.

சூரியப்பிரகாஷ் said...

ஆச்சரியமூட்டும் இந்த காணொளியை கண்டு வியந்து போனேன்.........

அவர் இந்த கருவியை பற்றி தகவல்களை சுதந்திர வன்பொருளாய் வெளியிடப்போவதாக கூறீயதை கேட்டு பெருமையடைந்தேன்...

இதுதான் இந்தியன்............

blogpaandi said...

மேலும் தகவல்களுக்கு

http://abulbazar.blogspot.com/2009/12/blog-post_03.html?zx=907f0ecaeceb4786